சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்க்க வலியுறுத்தல்
19 Dec 2025, 6:05 pm
<p><strong>சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்க்க வலியுறுத்தல்</strong></p>
<p>ஈரோடு, டிச.19- குழந்தைகள் சத்துணவு திட்டத் தில், பாலையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க ஈரோடு மாவட்ட 7 ஆவது மாநாடு, கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கே.ரத்தி னம் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை முனுசாமி ஏற்றி வைத்தார். கே.எம்.விஜயகுமார் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் பி.பெருமாள் துவக்க வுரையாற்றினார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். வி.மாரிமுத்து வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், தீவனங்கள் மற்றும் கால்நடை விலை உயர்ந்துள்ள நிலை யில், பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 வீதம் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். அரசின் ஊக்கத் தொகையை காலதாமதம் இல்லா மல் வழங்க வேண்டும். கலப்பு தீவ னம் 0 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும். மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, பாலை வண்டி யில் ஏற்றுவதற்கு முன்பாக தரத்தை யும், அளவையும் குறித்து கொடுக்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.எம்.விஜய குமார், துணைத்தலைவர்களாக தண்டபாணி, சி.பெரியசாமி, செய லாளராக பிரகாசம், இணைச்செய லாளராக விஜயா, துணைச்செயலா ளராக சி.மகேஷ், பொருளாளராக பி.ஆனந்தராஜ் உட்பட 20 மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் ஏ.எம்.முனுசாமி நிறைவுரை யாற்றினார். ஆர்.கணேசன் நன்றி கூறினார்.</p>
