தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு

30 Mar 2026, 3:40 pm
கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு
<p><strong>கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு</strong></p> <p>உடுமலை, மார்ச் 30 - &nbsp;உடுமலை கல்லாபுரம் பகுதியில் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய கல் வெட்டு கண்டறியப்பட்டுள்ளது என உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளனர். &nbsp;மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் மலைகளினூடே அமைந்தி ருக்கும் ஊரே கல்லாபுரம். இங்கு ஐயா யிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட &nbsp;மனிதக்குழுக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சான்றுகளாக பாறை ஓவி யங்கள் இருக்கின்றன. அதேபோல் &nbsp;சங்க இலக்கியப்பாடல்களிலும் கல்லா மலர் &nbsp;குறித்தும், அயிரை தெய்வத்தை வழிபட்டமைக்கான பதிற்றுப்பத்து பாடல்களும் சான்றாக உள்ளன. &nbsp;அதே போல் மூவாயிரம் ஆண்டு காலத்திற்கும் முற்பட்ட மனிதர்கள் வசித்தமைக்கான கற்திட்டைகளும் அமராவதி ஆற்றின் நதிக்கரையில் இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக &nbsp;கி.பி.8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. &nbsp;13 ஆம் நூற்றாண்டு முடிய சேர, சோழ, &nbsp;பாண்டியர் கால ஆட்சியில் இங்கு விக்கி ரம சோழன், வீரராசேந்திரன் போன்ற சிற் றரசர்கள் ஆட்சி செய்தமைக்கான கல் வெட்டுகளும் கிடைத்துள்ளன. தற் போது கல்லாபுரத்திற்கும் மணல் மேட் டிற்கும் இடையே உள்ள &nbsp;மண்டபத் துறை பகுதியில் 25க்கும் மேற்பட்ட &nbsp;கல் &nbsp;தூண்கள் சிதிலமடைந்து கிடக்கின் றன. இது கோயில் மண்டபத்திற்கா கவோ, அல்லது படித்துறை மண்டபத் திற்காகவோ அமைக்கப்பட்டிருக்க லாம். எட்டடி உயரமும், &nbsp;எண்கோண சதுர &nbsp;அளவில் ஒரே அமைப்பில் வெட் டப்பட்ட கற்தூண்களாக இருக்கின்றன. &nbsp;இந்தக் கல்தூணில் இரண்டு வரிகள் சிதி லமடைந்த கல்வெட்டு எழுத்துகள் உள் ளது. இதில் நிலத்தின் எல்லைகளை குறிக்கும் கல்வெட்டாகவும், கொடை &nbsp;அளிக்கப்பட்ட &nbsp;நிலத்தின் எல்லைகளை குறிக்கப்பட்ட கல்வெட்டு எழுத்துகளா கவும், நிலத்தின் வடக்குப் பகுதி குறிக் கையில் அதன் தெற்கு எல்லையை குறிப்பிடுகிறது. &nbsp;இந்த நான்கு எல்லைக ளுக்குட்பட்ட &nbsp;நிலம் என்று கல்வெட்டு &nbsp;நீண்டு செல்லும் பகுதியாக இருக்கிறது. &nbsp;முழுமையான கல்வெட்டு கிடைக்கப் பெறவில்லை. இதில் வரும் &lsquo;த்ர&rsquo; எழுத்து கிரந்த எழுத்து வடிவத்தை ஒத் திருப்பதாக தொல்லியல் ஆய்வ றிஞர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார். மேலும், இதற்கு அருகில் அரை அடி &nbsp;ஆழமுள்ள பாறைக்குழிகளும் இருக் கின்றது. அமராவதி நதியின் கரையில் மனித சமூகம் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக இதனைக் கருத்தில் கொள்ளலாம். குமரலிங்கம் கரி வரத ராஜ பெருமாள் கோயிலில் கல்லாபுரம் &nbsp;பகுதியில் நிலங்களை அளப்பதற்கா கவே அளவுகோல் கண்டெடுக்கப்பட்ட தையும் இவ்விடத்தில் நாம் &nbsp;நினைவு கூற லாம். கடத்தூர் மருதீசர் கோயில் கல்தூண் ஒன்றை கல்லாபுரத்தில் சொக்கி என்பவர் செய்து கொடுத்த மைக்கான கல்வெட்டு இருப்பதையும் &nbsp;நாம் இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும். இந்தப் பாறைக்குழிக்கு அரு கில் வசிக்கும் மக்களிடம் இது குறித்து விசாரித்தபோது இந்த மரத்தின் கீழ் &nbsp;வழிபாடு இருந்ததாகவும், காலப்போக் கில் இந்த கற்தூண்கள் சிதிலமடைந்த தால் அந்த வழிபாடும் மறக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். கல்லாபுரம் பகுதியில் கொடைவள் ளல் குமணன் வரலாற்றுக்காக உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தொல்லியல் ஆய்வறிஞர் &nbsp;மூர்த் தீஸ்வரி, பல்லடம் அரசு கலைக்கல்லூரி &nbsp;பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்வளர் ஜெய்சிங், வி.கே.சிவகுமார், வீரய்யன், &nbsp;மற்றும் அருட்செல்வன் ஆகியோர் தொடர்ந்து கள ஆய்வு செய்து வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.