தீராத பாசனக் கோரிக்கைகள்!
27 Mar 2026, 3:15 pm
<p><strong>தீராத பாசனக் கோரிக்கைகள்! </strong></p>
<p>உடுமலைப்பேட்டை தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு 2011 இல் உருவாக்கப்பட்ட மடத்துக்குளம். 100 சதவீதம் கிராம ஊராட்சி களை கொண்ட இந்தத் தொகுதி, முழுக்க முழுக்க விவசா யத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் மட்டுமே வாழ்வாதார மாக கொண்டுள்ளது. 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலை யில், இத்தொகுதியின் அரசியல் சூழல் மற்றும் மக்களின் எதிர் பார்ப்புகளை அலசுகிறது இந்த தொகுப்பு. தொகுதியின் பலம் மடத்துக்குளம் தொகுதி வெறும் விவசாய பூமி மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலங்களின் சங்கமமும் கூட. புகழ் பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், அமராவதி அணை, ராணுவப் பள்ளி எனத் தனித்துவமான அடையாளங்கள் இங்குண்டு. சுமார் 2,12,742 வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தேர்தல்களையும் உற்று நோக்கினால், இத்தொகுதி எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தரக் கோட்டையாக இல்லை என்பது புரியும். 2011: அதிமுகவின் சண்முகவேலு 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016: சுமார் 1,600 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் திமுகவின் ஜெயராமகிருஷ்ணன் வெற்றியை தட்டிச் சென்றார். 2021: மீண்டும் அதிமுக வசமானது. சி.மகேந்திரன் 6,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார். விவசாயிகளின் தீராத ’தாகம்’ மடத்துக்குளம் தொகுதி மக்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் நீர் மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்தே உள்ளன. அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வீணாக வெளியேறுவதைத் தடுக்க, ’அப்பர் அமராவதி’ அணை கட்ட வேண்டும் என்பது பல ஆண்டுகாலக் கோரிக்கை. ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர். பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியான ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், பல தசாப்தங்களாக கானல் நீராகவே உள்ளது. இத்திட்டம் நிறை வேற்றப்பட்டால் மட்டுமே இப்பகுதி விவசாயம் செழிக்கும். கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும். மேலும், மடத்துக்குளம் தாலூகாவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் மற்றும் காய்கறிகளை சேமிக்க நவீன குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. திருமூர்த்தி அணையில் இருந்து செயல் படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டம், பெயரளவில் மட்டுமே இருப்பதாக மக்கள் குமுறுகின்றனர். அனைத்து ஊராட்சி களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது. விளிம்பு நிலை மக்களின் குரல் தொகுதியில் உள்ள 17 மலைவாழ் மக்கள் கிராமங்களின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. தார் சாலை, மின்சாரம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக அவர்கள் இன்னும் போராடி வருகின்ற னர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல்களில் தங்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட காலக் கோரிக்கை. தேர்தல் களம் 2026: சவால்கள் என்ன? மடத்துக்குளம் மக்கள் எப்போதுமே அமைதியானவர்கள், ஆனால் தேர்தல் முடிவுகளில் அதிரடி காட்டுபவர்கள். ”அரசு கல்லூரிகள் வந்துவிட்டன; ஆனால் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரும், விளைபொருட்களுக்கு உரிய விலையும் எப்போது கிடைக்கும்?” என்பதே இப்போதைய கேள்வி.</p>
