இந்தியப் பெருங்கடல் பன்னாட்டு கூட்டுப் பாதுகாப்புப் பயணம் நிறைவு கொச்சி திரும்பிய கடற்படைக் கப்பல் சுனைனா
21 May 2026, 1:35 am
<p><strong>இந்தியப் பெருங்கடல் பன்னாட்டு கூட்டுப் பாதுகாப்புப் பயணம் நிறைவு கொச்சி திரும்பிய கடற்படைக் கப்பல் சுனைனா</strong></p><p>கொச்சி, மே 20- இந்தியப் பெருங்கடல் பகுதியில் வர லாற்றுச் சிறப்புமிக்க பன்னாட்டு கூட்டுப் பாது காப்புப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இந்தியக் கடற்படைக் கப்பலான சுனைனா புதனன்று கொச்சி துறை முகத்திற்கு வந்தடைந்தது. பிராந்தியத்தில் உள்ள அனைவருக் கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் படி, ‘ஒரே பெருங்கடல், ஒரே இலக்கு’ என்ற நோக்குடன் இப்பயணம் மேற்கொள்ளப் பட்டது. இதில் வங்காளதேசம், இந்தோனே சியா, மலேசியா, மாலத்தீவு, தென்னாப் பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 16 நட்பு நாடுகளைச் சேர்ந்த 38 கடற்படை வீரர்கள் இந்தியக் கடற்படையுடன் இணைந்து பங்கேற்றனர். பிராந்தியத்தின் முதன்மைப் பாதுகாப்புப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளதை இப்பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி மும்பையிலி ருந்து புறப்பட்ட இக்கப்பல் மாலே, புக்கெட், ஜகார்த்தா, சிங்கப்பூர், யாங்கோன், கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்றது. இப்பய ணத்தின் போது கூட்டுப் பயிற்சிகள், கடல்சார் பாதுகாப்பு விவாதங்கள், கடற் கொள்ளை தடுப்பு, சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொச்சி துறைமுகத்திற்குத் திரும்பிய கப்பலுக்குத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா இந்த விழா வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, பன்னாட்டு வீரர்களின் சிறந்த கூட்டு உழைப்பைப் பாராட்டினார். இத்தகைய கூட்டுப் பயணங்கள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.</p>
