தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புல்டோசர் நடவடிக்கையால் வாக்குரிமை இழந்த அப்பாவி மக்கள்

23 Feb 2026, 5:09 pm
புல்டோசர் நடவடிக்கையால் வாக்குரிமை இழந்த அப்பாவி மக்கள்

புல்டோசர் நடவடிக்கையால் வாக்குரிமை இழந்த அப்பாவி மக்கள்

உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

புதுதில்லி பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ வின் அக்பர் நகரில் உள்ள குய்க்ரைல் நதிக்கரையோரம் இருந்த வீடுகள், வணிகக் கட்டி டங்கள் செப்டம்பர் 2023இல் இடிக்கப்பட்டன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த வீடுகள், வணிகக் கட்டிடங்களை “சட்டவிரோதமா னது” என்று அறிவித்ததால், இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்ட தாக அம்மாநில அரசு மழுப்பலாக விளக்கம் அளித்தது.  வீடுகளை இழந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் மக்கள் ஆவர். குறிப்பாக வீடு கள் இடிக்கப்பட்ட பிறகு, அந்த மக்களுக்கு “அடையாளம் காணக் கூடிய இருப்பிடம்” இல்லாததால், உத்தரப்பிரதேசத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (எஸ்ஐஆர்) போது அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மக்களின் வாக்குகளை நீக்க உத்தரப்பிரதேச பாஜக அர சின் திட்டமிட்ட சதி என குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், புல்டோசர் நடவ டிக்கையால் வாக்குரிமை இழந்த அக்பர் நகர் மக்கள் சார்பாக சனா பர்வீன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திங்களன்று விசார ணைக்கு வந்தது.  மனுதாரர், அரசு, தேர்தல் ஆணைய வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,”இது ஒரு உள்ளூர் பிரச் சனை என்பதால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணு குங்கள்” என உத்தரவிட்டது.  இருப்பினும், வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்ப்பது தொ டர்பான பிரதிநிதித்துவங்களுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வில்லை என்ற வாதத்தை அடுத்து,“லக்னோ மாவட்ட தேர்தல் அதிகாரி இந்த விவகா ரத்தை ஆய்வு செய்து, வீடிழந்த மக்களின் வாக்காளர் உரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரியின் தலையீடு பலன ளிக்கவில்லை என்றால், பாதிக் கப்பட்டவர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியது. ஆனால் புல்டோசர் நடவ டிக்கையால் வாக்குரிமை இழந்த மக்களுக்கு நிவாரணமாக எந்த உத்தரவையும்  உச்சநீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.