தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Mar 2026, 4:13 pm
சென்னை விரைவு செய்திகள்

சென்னை அமெரிக்க தூதரக பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, மார்ச் 28- சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு காரணங்களுக்காக, இரவு நேரங்களில் வாகனங்கள் எதிர் திசையில் திருப்பி விடப்பட்ட நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே கடும் விபத்து அச்சத்தை ஏற்படுத்தியது.  முறையான அறிவிப்புப் பலகைகள் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட இந்தத் திட்டமிடப்படாத மாற்றத்திற்குச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இனி பிரதான சாலையில் போக்குவரத்துத் தடைகள் நீக்கப்பட்டு, தூதரகத்தைச் சுற்றியுள்ள சர்வீஸ் சாலைகள் மட்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நிலவி வந்த போக்குவரத்துச் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.82 லட்சம் மதிப்பிலான  தங்கம் பறிமுதல்

சென்னை, மார்ச் 28- சட்டமன்றத் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் தேர்தல் சிறப்புக் குழுவினர் தீவிர சோதனை நடத்தினர். வெள்ளியன்று மாலை  4:40 மணியளவில், 3-வது நடைமேடையில் சிராலா (சார்லாப்பள்ளி) நோக்கிச் செல்லத் தயாராக இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் (12603) சோதனையிட்டபோது, ஆந்திராவைச் சேர்ந்த நூனே சதீஷ் குமார் (45) என்பவர் பிடிபட்டார். அவரது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 574 கிராம் எடையுள்ள 13 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.82,09,744 ஆகும். விசாரணையில், இந்தத் தங்கம் வணிக நோக்கத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பிடிபட்ட நபரை மேல் நடவடிக்கைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

அணுகுமுறையில் தெளிவாக இருப்பதை நான் நம்புகிறேன்”   மகேந்திர சிங் தோனி பேட்டி

கோவை, மார்ச் 28- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் எளிமை குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக ஒன்றிய அரசின் பீம் செயலியின் நிறுவன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அவர், “பல ஆண்டுகளாக, விஷயங்களை எளிமையாகவும் அணுகுமுறையில் தெளிவாகவும் வைத்திருப்பதை நான் எப்போதும் நம்புகிறேன். பீம்  செயலியில் என்னை ஈர்த்த விஷயம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நேரடியானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் அது கொண்டுள்ள கவனமாகும்,” என்றார்.

அசோக் நகரில் ரூ.77.29 கோடி  மதிப்பிலான நகைகள் பறிமுதல்

சென்னை, மார்ச் 28- தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ், முறையான போக்குவரத்து அனுமதி இல்லாத காரணத்தால் அசோக் நகரில் ரூ.77.29 கோடி மதிப்பிலான 381.762 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசோக் நகர் 11-வது அவென்யூவில் தேர்தல் கண்காணிப்புப் பணியின் போது, தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம் சோதனையிடப்பட்டது. அந்த நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்த மட்டுமே அனுமதி பெற்றிருந்தது. ஆனால், பிடிபட்ட வாகனம் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும், அதில் பெருமளவிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்பட்டதும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாவீர் ஜெயந்தி:

மார்ச் 31 மதுபானக் கடைகள் மூடப்படும் விழுப்புரம்,  மார்ச் 28- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விழுப்புரம் மாவ ட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்), மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்று ஒருநாள் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியாளர் கொலை வழக்கில்   4 பேருக்கு ஆயுள்

சென்னை, மார்ச் 28- மதுரவாயலைச் சேர்ந்த கடல்சார் பொறியாளர் டில்லிபாபு (எ) வெங்கடேஷ் (29)கடந்த 2012 பிப்ரவரி 6-ஆம் தேதி காரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த டில்லிபாபுவைக் கடத்திய கும்பல், அவரைத் திருவண்ணாமலைக்குக் கொண்டு சென்று கொலை செய்தது. பின்னர் அவரது உடலை எரித்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளுடன் தப்பிச் சென்றனர். இவ்வழக்கை விசாரித்த பூந்தமல்லி மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், கார்மேகம், பூபாலன், ராஜ்குமார் மற்றும் சுந்தரேசன் ஆகிய 4 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது.

வருமான வரி மோசடி: முன்னாள் அதிகாரி உட்பட 7 பேருக்கு 4 ஆண்டு சிறை

சென்னை, மார்ச் 28- போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.2.38 கோடி வருமான வரி ரீஃபண்ட் மோசடி செய்த வழக்கில், வரு மான வரித்துறையின் முன்னாள் அதிகாரி உட்பட 7 பேருக்குச் சென்னை சிபிஐ  நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஜூன் 4 முதல் 2019 ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில், போலி ஆவணங்கள் மற்றும் போலி அடை யாளங்களைப் பயன்படுத்தி வருமான வரி ரீஃபண்ட் பெற்று அரசுக்கு ரூ.2.38 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வருமான வரித்துறை உதவி ஆணையர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கடந்த 2019-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த மோசடியில் முக்கிய மூளை யாகச் செயல்பட்டவர் அப்போது சென்னை வருமான வரித்துறையில் மூத்த வரி உதவியாளராகப் பணியாற்றிய பாபு பிரசாத் குமார் ஆவார். இவர் முறை கேடாகப் பெற்ற பணத்தைத் தனது குடும்பத்தி னர் மற்றும் கூட்டாளிகளின் வங்கி கணக்கு களுக்கு மாற்றி மறைக்க முயன்றது விசா ரணையில் தெரியவந்தது. இவருடன் சேர்ந்து காவல் ஆய்வாளர் ட்ரெவெல்லின் மரியன் கார்னைல் பி. பிரவீன் குமார், பி. ஸ்டீபன், ஏ. கோபிகிருஷ்ணா, வெங்கடேஷ் மற்றும் சி. குணசீலன் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்குத் தொடர்பாக 2021-ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த 7 குற்றப்பத்திரிகைகளை விசாரித்த நீதி மன்றம், குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மேலும், அவர்களுக்கு மொத்தம் ரூ.2.4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில்  கோவில் திருவிழா:

கள்ளக்குறிச்சியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

ஏப்ரல் 1 வரை போக்குவரத்து மாற்றம் சென்னை, மார்ச் 28- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக மார்ச் 29-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் மார்ச் 30-ஆம் தேதி அறுபத்து மூவர் திருவிழா ஆகிய முக்கிய நாட்களில் லஸ் சந்திப்பு, மந்தைவெளி மற்றும் ஆர்.கே. மட் சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படும். மாநகரப் பேருந்துகள் தற்காலிகமாக லஸ் சர்ச் சாலை யிலிருந்து இயக்கப்படும் என்றும், மாட வீதிகளில் வாக னங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காகப் பி.எஸ். பள்ளி மைதானம் உள்ளிட்ட இடங்களில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்  பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி, மார்ச் 28- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு அலு வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதனை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு மையங்க ளில் மொத்தம் 6,892 அலுவ லர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளுதல், மாதிரி வாக்குப் பதிவு நடத்துதல், தேர்தல் படிவங்களைப் பூர்த்தி செய்தல் மற்றும் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மண்டல அலு வலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறி வுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.