மீன்பிடித்தடைக்கால நிவாரண நிதியினை உயர்த்தி வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் குமரி மீனவர் குறைதீர் கூட்டத்தில் தகவல்
30 Jan 2026, 2:24 pm
<p><strong>மீன்பிடித்தடைக்கால நிவாரண நிதியினை உயர்த்தி வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் குமரி மீனவர் குறைதீர் கூட்டத்தில் தகவல்</strong></p>
<p>நாகர்கோவில்,ஜன.30- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் ஜனவரி 30 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை தலைமை யில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை மீனவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர், மீன்வளம் -மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கன்னியா குமரி, உதவி இயக்குநர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது. மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக நடத்திடவும், உலக மீனவர் தினத்தினை அரசு விடுமுறை நாட்களுடன் சேர்த்திடவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் சரக்கு கப்பல் கவிழ்ந்து கன்னி யாகுமரி மாவட்ட கடலோர பகுதிகள் மாசுப்பட்டதற்கான இழப்பீடு கேட்டு கருத்துரு அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும், மீனவ மக்களுக்கு வழங்கப்பட்ட சிங்கார வேலன் குடியிருப்பு மற்றும் சுனாமி குடியிருப்பு வீடுகளை மறுசீரமைத்திட மனுக்கள் பெறப்பட்டு வரும் ஆண்டின் (2026-27) கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் மறுசீரமைக்கப்படும் என்றும், ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தலுக்கு முன்னர் கடலோர மீனவ மக்களின் கோரிக்கைகளின்படி மற்றும் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் வார்டு மறுவரை யறை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப் படுமென்றும், மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடித்தடைக்கால நிவாரண நிதியினை உயர்த்தி வழங்கிட கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்பொழுது வரை ஆய்வு மேற்கொண்டு பட்டா வழங்கப்படாத சிங்கார வேலன் மற்றும் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு வரும் மாதம் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கடலோர கிராமங்களில் கட்டப்படும் மீனவ மக்களின் புதிய குடியிருப்புகளுக்கு எளிமையான முறையில் CRZ Clearance வழங்கிடவும், ஊராட்சி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு CRZ பற்றிய தெளி வான விளக்கம் அளித்திட நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், கடற்கரை பகுதிகளில் உள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும், பேரிடர் காலங்களில் கடலில் மீனவர் களை விரைந்து மீட்டிட கடல் ஆம்பு லன்ஸ்க்கான கருத்துரு அரசுக்கு சமர்ப்பித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.</p>
