தேர்தல் தேதியால் தொழில்துறைக்கு முடக்கம்
17 Mar 2026, 3:26 pm
<p><strong>தேர்தல் தேதியால் தொழில்துறைக்கு முடக்கம் </strong></p>
<p>சென்னை, மார்ச் 17 - உலக அளவில் மிகுந்த பதற்ற மும், பொருளாதார அசாதாரண நிலையும் நிலவி வரும் இந்த நேரத்தில், இந்திய பொருளாதாரத் திற்கு தொடர்ந்து நிர்வாக ஆதரவும் கொள்கை நிலைத்தன்மையும் மிக வும் அவசியமான தருணத்தில் 5 முக்கிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்திருப்பதற்கு இந்திய தொழில் முனைவோர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “சர்வதேச அளவில் போர் சூழ்நிலை தீவிரமடைந்து, உலகளாவிய சப்ளை செயின் ஏற்கெ னவே அழுத்தத்தில் இருக்கும் நிலை யில், உயர்ந்து வரும் உற்பத்திச் செலவுகள், எரிசக்தி பற்றாக்குறை, குறைந்த சந்தை தேவை மற்றும் பணப்புழக்க சிக்கல்கள் போன்ற பல்வேறு சவால்களை இந்திய தொழில் துறைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் அரசுகள் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து, தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் பல வாரங்களுக்கு நிர்வாக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிவிடும். முக்கிய கொள்கை முடிவுகள், நிதி அனுமதிகள், தொழில் துறை ஆதரவு திட்டங்கள் மற்றும் நிர்வாக தீர்மானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். மிக வும் குறைந்த லாப விகிதத்தில் இயங் கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்களுக்கு இது பேரழிவாக மாறக் கூடும். தேர்தல் நடைபெறவுள்ள பல மாநிலங்கள் இந்தியாவின் முக்கிய உற்பத்தி மற்றும் தொழில்துறை மையங்களாக உள்ளன. மேலும் அவை பெரும்பாலும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களாகும். இந்த அரசியல் சூழ்நிலையில் ஒன்றிய மற்றும் மாநில நிர்வாக ஒருங்கி ணைப்பு மேலும் மந்தமாகும் அபா யம் உள்ளது. இதன் விளைவாக தொழில் செயல்பாடுகள், வேலை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி துறை களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். தொழிற்சாலைகள், அரசியல் பிரச்சாரங்களைப் போல நிறுத்தி மீண்டும் தொடங்கக் கூடியவை அல்ல. தொழில்துறை தொடர்ச்சி யான நிர்வாகம், கொள்கை நிலைத் தன்மை மற்றும் நேர்மையான அர சாங்க ஆதரவைப் பொறுத்தே இயங்குகிறது. பொருளாதாரம் ஏற்கெ னவே நுணுக்கமான நிலையில் உள்ள இந்த காலக்கட்டத்தில் நீண்ட நிர்வாக முடக்கம் தொழில்களுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் திரும்ப முடியாத சேதத்தை ஏற்ப டுத்தக் கூடும். நீண்ட கால தேர்தல் அட்டவணை கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் சங்கம் வலி யுறுத்துகிறது. ஏற்கெனவே அழுத்தத் தில் இருக்கும் இந்திய தொழில்துறை அரசியல் கால அட்டவணைகளின் பலியாக மாறக் கூடாது. நாடு பொருளாதார வலிமை மற்றும் தொழில்துறை நிலைத்தன் மையை முன்னிறுத்த வேண்டிய இந்த நேரத்தில் நிர்வாக செயல்பாடு களை முடக்கக் கூடிய முடிவுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் தீங்கு விளைவிக் கும். இது மிகுந்த வருத்தத்துக்குரிய அறிவிப்பு” என தெரிவித்துள்ளார்.</p>
