மூலப்பொருள் விலையேற்றத்தால் ஐப் ஆர்ஆர் கட்டணத்தை உயர்த்த தொழில்துறை முடிவு
8 Apr 2026, 5:30 am

மூலப்பொருள் விலையேற்றத்தால் ஐப் ஆர்ஆர் கட்டணத்தை உயர்த்த தொழில்துறை முடிவு

கோவை, ஏப். 7- மூலப்பொருள் விலையேற்றத்தால், ஐப் ஆர்ஆர் கட்டணத்தை உயர்த்த தொழில் துறை முடிவு செய்துள்ளதாக சிறு குறு தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சிறு குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறும் போது, தொழில் துறை சார்ந்த துணை நூல்கள் தொடர்ச்சியாக விலைகளை சந்தித்து வருகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாக மூலப்பொருட்களின் விலை கட்டுப்பாடு இன்றி உயர்ந்து வருவதால், கோவை மாவட்டத் தொழில்கள் நாடு முழுவதும் உள்ள தொழில் துறையினர் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் மூலப்பொருட்களின் விலை ஏற்றப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டண உயர்வுக்கும் கோவை மற்றும் இதர மாவட்டங்களில் தனி கமிட்டி அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்தோம். அப்போது தங்கத்தின் விலை போல தொடர்ந்து மூலப்பொருள் விலை ஏறும் இருந்தால், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவோம் என தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.

இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அதிக லாபத்தை பெறுகின்றன. ஆனால் சாதாரண சிறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோவை மாவட்டத் தொழில்துறை சார்பில் ஐப் ஆர்ஆர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இப்போது கிட்டத்தட்ட 30 சதவீத தொழில்துறையினர் வெளியேறி உள்ளனர். மீதமுள்ள 70 சதவீதத்தினர் நஷ்டத்தில் இயங்க முடியாமல் திணறி வருகின்றனர். இதை உணர்ந்து ஒன்றிய அரசு உடனடியாக மூலப்பொருள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த விலை நிர்ணய கமிட்டியை அமைக்க வேண்டும்.