தொழில் - தொழிலாளர்களை ஒருபோதும் பாஜக பாதுகாக்காது! சிறுதொழில் முனைவோர் மத்தியில் பெ. சண்முகம் பேச்சு
29 Jan 2026, 3:04 pm

தொழில் - தொழிலாளர்களை ஒருபோதும் பாஜக பாதுகாக்காது! சிறுதொழில் முனைவோர் மத்தியில் பெ. சண்முகம் பேச்சு

திருப்பூர், ஜன. 29 – இந்தியத் தொழில்களையும், கோடிக்கணக்கான தொழி லாளர்களையும் ஒருபோதும் ஒன்றிய பாஜக அரசு பாதுகாக்காது என்றும், நாடாளுமன்ற, சட்டமன்றங் களில் இடதுசாரிகளின் பலம் அதி கரிக்கும் போதெல்லாம், மக்கள் பயன்பெறுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். திருப்பூர் காங்கேயம் சாலை தனியார் அரங்கத்தில் புதனன்று நடைபெற்ற சிறு தொழில் நடத்து வோர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது: விற்பனைச் சரக்காக்கப்படும் அத்தியாவசிய தேவைகள்! நாடாளுமன்ற, சட்டமன்றங் களில் இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதை நாங்கள் மக்களுக்கு, மக்கள் நலன் காப்பதற்கு பயன்படுத்து கிறோம். பாஜக அரசு நாடாளு மன்றத்தில் மின்சாரச் சட்டம் -2025, விதைகள் சட்டம் -2025 ஆகிய வற்றை நிறைவேற்ற இருக்கிறது.

மின் உற்பத்தி, விநியோகத்தை தனியார்மயம் ஆக்குவது தான் இந்த சட்டத்தின் நோக்கம். வாழ்க்கை யின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும், விற்பனை சரக்காக மாற்றுகின்றனர். தனியாரிடம் சென்றால் அனைத்து தரப்பு மக்களும் மின்சாரத்தை பயன்படுத்த முடி யாது. எனவே இந்த சட்டமே வராமல் தடுப்பது, தனியார்மயத்தை தடுப்பது அவசியம். தொழில் - தொழிலாளர்களை ஒருபோதும் பாஜக பாதுகாக்காது! அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பினால் சிறு தொழில்கள் மட்டுமல்ல, அதனை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். ஆனால், ஒன்றிய மோடி அரசு வாய்மூடி மவுனியாக உள்ளது. பாஜக அரசு ஒருபோதும் தொழில்களையும், தொழிலாளர் களையும் பாதுகாக்காது. திருப்பரங்குன்றம் தீபம் பிரச்ச னையை, கடந்த இரண்டு மாதங் களாக அணையாமல்- அதனை வைத்து கலவரத் தீ மூட்டும் வகை யில் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அநீதியான ஒரு தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கூட்டம் தான் சங்-பரிவாரங்கள்! சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதை எதிர்த்து, பாஜக தான் பிரச்சாரம் செய்தது. அதேபோல் பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, ஆனால், அதனை மதிக்காமல் மசூதியைத் தகர்த்தனர். எனவே, நீதிமன்ற தீர்ப்பு இவர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்பது, மாறாக இருந்தால் எதிர்ப்பது என்பதுதான் இவர்கள் அணுகுமுறை. இத்தகைய மதவெறி சக்திகளின் தாக்குதலுக்கு எதிராக திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழ கத்துக்கு தரவேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி பங்கீடு, இயற்கை பேரிடர் நிதி, கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள், ஓசூர் விமான நிலையம் என தமிழ்நாட்டு மக்க ளுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. இதற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரி விப்பதுடன், தங்கள் கட்சிக்காரர் களை களத்தில் இறக்கி போராட்ட மும் நடத்துகிறது. திமுக அரசு மக்களுக்கு பாதகமான விஷயங் களை மேற்கொள்ளும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவற்றை எதிர்த்து வருகிறது. பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே இன்றைய தேவை! தேர்தல் ஆணையம் பாஜக-வின் கைப்பாவையாக மாறிவிட்ட சூழலில், 2026 தேர்தலில் பாஜக - அதிமுகவை தடுப்பது தான் மிக முக்கியம். திமுக கூட்டணி தான் இதற்கு சரியான சக்தியாக இருக்கும். விஜய் அரசியலை கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு முன், அதற்குப் பின் என பிரித்துப் பார்க்க வேண்டும். கரூர் சம்பவத்திற்கு முன், பாஜகவை கொள்கை எதிரி என்று சில வார்த்தைகள் விமர்சித்து விட்டு திமுகவை கடுமையாக தாக்கி னார். ஆனால், கரூர் சம்பவத்திற்குப் பிறகு பாஜக-வைப் பற்றி பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டார்.

பாஜக எதிர்ப்பில் ஊசலாட்டமான நபராக விஜய் இருக்கும்போது எப்படி அவரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியும்? சிறு, குறு தொழில்களை பாதுகாக்கப் போராடும் சிபிஎம்! இந்தியாவில் சிறு, குறு தொழில்களை பாதுகாக்கவும், அவற்றை நம்பி வாழும் 90 சதவிகித மக்களை மற்றும் அவர்களது வேலை வாய்ப்பைப் பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது, என்று பெ. சண்முகம் கூறினார். முன்னதாக இந்த கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி தலைமை ஏற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ் ஆகியோர் உரை யாற்றினர். திரளாகப் பங்கேற்ற சிறு தொழில் துறை சார்ந்தவர்கள் தற்போதுள்ள தொழில் நிலைமை மற்றும் தேவைகள் குறித்து கருத்துத் தெரிவித்தனர். இதை யடுத்து இவர்களது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக பெ.சண் முகம் தெரிவித்தார். (ந.நி.)