தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Mar 2026, 2:55 pm

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 2 தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மங்களம் மற்றும் தட்டாஞ் சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதலமைச் சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். இதன்படி இரு தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 16 அன்று தொடங்கி யுள்ள நிலையில், மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாளா கும். திமுக கூட்டணியிலும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியி லும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. பாஜக வுடன் கூட்டணியில் இருப்பதாக ரங்கசாமி தெரிவித்தா லும் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. கடந்த 2021 தேர்தலில் ஏனம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரி டம் தோல்வியடைந்த ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகு தியில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் பாடம் புகட்டும்’

சென்னை: அமைச்சர் பி.கே.சேகர் பாபு சென்னை யில் செய்தியாளர்களைச் சந்தித்து தவெக கட்சியை மறைமுகமாக விமர்சித்தார். “எங்களை யாரையுமே சவா லாக நினைப்பதில்லை. மக்கள் பணிகளை மையப்படுத் தியே தேர்தல் களத்தில் இருக்கிறோம். உண்மையான மக்கள் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னா லேயே உள்ளது. கூவிக்கூவி அழைத்தும் எங்களுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. திமுக கூட்டணி வலி மையானது. பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் பாடம் புகட்டும்” என்று அவர் தெரிவித்தார்.

8 மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை 850 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு: கணக்கெடுப்பு தொடக்கம்

சென்னை: மதுரை, சேலம், தென்காசி, கோயம்புத் தூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சில நாட்களுக்கு முன்பு திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய மழையினால் மொத்தம் 850 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், தென்காசி மாவட்டங்களில் சுமார் 810 ஹெக்டேரில் நெல், எண்ணெய்வித்துகள், சிறுதானியங் கள், பருத்தி, கரும்பு ஆகிய வேளாண் பயிர்களும், கோயம் புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 40 ஹெக்டேரில் வாழை, சின்ன வெங்காயம், முருங்கை, தென்னை, மலர்கள் ஆகிய தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கியுள்ளன.

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக் கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவ ணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர் களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 16 ஆம் தேதி வரை யிலும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாண வர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடை பெறவுள்ளன. தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொ டங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தொழில்துறை எரிபொருள் விலை உயர்வு

சென்னை: தொழில் துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.21.92 உயர்ந்து ரூ.109.56 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.87.67 ஆக விற்பனையாகி வந்த தொழில்துறை எரிபொரு ளின் புதிய விலை வெள்ளி யன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரி வித்துள்ளது. எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி சென்னை: கீழ்ப்பாக் கம் அரசு மனநல மருத்துவமனையில் வரும் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் எம்.ஏ. கிளினிக்கல் சைக் காலஜி புதிய படிப்பை தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் இது தொ டர்பான அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த மருத்துவமனை யில் 2016 முதல் நடை பெற்று வந்த எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி படிப்பிற்கு பதிலாக, இந்திய மறுவாழ்வு கவுன் சில் அறிவுறுத்தலின்படி இப்புதிய படிப்பு அறிமுகப் படுத்தப்படுகிறது. ஆண்டு தோறும் 18 மாணவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப் படுவர். இந்திய மறுவாழ்வு கவுன்சில் மற்றும் தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திடம் தேவையான அனுமதிகள் பெறப்பட வேண்டும் என அரசா ணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.