தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வந்தவாசியில்‌ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌ வாக்குறுதி

10 Apr 2026, 5:30 am
வந்தவாசியில்‌ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌ வாக்குறுதி

வந்தவாசியில்‌ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌ வாக்குறுதி

திருவண்ணாமலை, ஏப்‌. 9- திருவண்ணாமலை மாவட்டம்‌, வந்தவாசி சட்டமன்றத்‌ தொகுதியில்‌ மதச்சார்பற்ற முற்போக்குக்‌ கூட்டணி சார்பில்‌ போட்டியிடும்‌ திமுக வேட்பாளர்‌ எஸ்‌. அம்பேத்குமார்‌, இன்று வந்தவாசி நகரின்‌ பல்வேறு பகுதிகளில்‌ தீவிர வாக்கு சேகரிப்பில்‌ ஈடுபட்டார்‌.

வந்தவாசி நகரம்‌, ஆரணி சாலை, காஞ்சீபுரம்‌ சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில்‌ உதயசூரியன்‌ சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, வழி நெடுகிலும்‌ பொதுமக்கள்‌ பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்‌.

இந்தப்‌ பிரச்சாரத்தின்‌ போது பேசிய அம்பேத்குமார்‌, “வந்தவாசி மக்களின்‌ நீண்ட கால கோரிக்கையான புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌” என உறுதி அளித்தார்‌.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில்‌ திமுக நகரச்‌ செயலாளர்‌ ஏ. தயாளன்‌, நகர மன்றத்‌ தலைவர்‌ எச்‌. ஜலால்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சி நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ எனப்‌ பெருந்திரளானோர்‌ கலந்து கொண்டனர்‌.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.