தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இண்டக்ஷன் அடுப்பு விற்பனை அதிகரிப்பு

11 Mar 2026, 4:32 pm
இண்டக்ஷன் அடுப்பு விற்பனை அதிகரிப்பு
<p><strong>இண்டக்ஷன் அடுப்பு விற்பனை அதிகரிப்பு</strong></p> <p>அமெரிக்க இஸ்ரேல் கூட்டு படை யினர் ஈரான் மீது தொடர்ந்து தாக்கு தலை நடத்தி வருகின்றனர். நாடு முழு வதும் பெரும் பதட்டமான சூழல் ஏற் பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடு &nbsp;மற்றும் வர்த்தகம் சார்ந்த தேவை களுக்கான சிலிண்டரை புக் செய்தால் &nbsp;25 முதல் 30 நாட்களுக்கு பிறகு கிடைக் கும் என்ற நிலை உள்ளதால் கடுமை யான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் தட்டுப் பாடு காரணமாக பெருநகரங்களில் உள்ள உணவு விடுதிகளில் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக பழங்கால முறையில் விறக டுப்பு சமையல் போன்ற பல்வேறு நட வடிக்கைகளில் பொதுமக்கள் ஈடு பட்டு வரும் நிலையில், தற்போது நக ரப் பகுதிகளில் அதிகளவு இன்டக்ஷன் ஸ்டவ் எனப்படும் மின்சாரம் மூலமாக &nbsp;உணவு தயாரிக்கும் மின் அடுப்புக ளின் விற்பனை கணிசமான முறையில் &nbsp;அதிகரித்துள்ளதாக இந்த தொழிலை &nbsp;சார்ந்து உள்ளார்கள் தெரிவித்துள்ள னர். ஈரோடு - நாமக்கல் சாலையில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வரும் கடை &nbsp;உரிமையாளர் ஒருவர் கூறும் பொழுது, கடந்த ஐந்து ஆண்டு களுக்கு முன்பு மின்சாரம் மூலம் &nbsp;உணவு தயாரிக்கும் மின் அடுப்புகளை பொதுமக்கள் அதி களவு பயன்படுத்தி வந்தனர். உண வின் சுவை, பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மின் அடுப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்த நிலையில், தற்போது &nbsp;கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மீண் டும் மின் அடுப்புகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல உணவுப் பொருட் களை சூடு படுத்தும் மைக்ரோ ஓவன் &nbsp;விற்பனையும் கணிசமான அளவு அதி கரித்துள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப் பாடு எப்போது சரியாகும் என இது வரையிலும் தெரியாத நிலையில் ஏற் கனவே பயன்பாட்டில் இருந்த பழுத டைந்த மின் அடுப்புகளையும் பழுது நீக்கி தரச் சொல்லி எங்களிடம் வாடிக் கையாளர்கள் தருகிறார்கள்,என்றார். - எம்.பிரபாகரன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.