முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

12 Nov 2026, 9:14 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

போலி கல்விச் சான்றிதழ்:துணை ஜனாதிபதி ராஜினாமா

இந்தோனேசிய துணை ஜனாதிபதி கிப்ரான் ரகாபூமிங் போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரத்தில் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலின் போது இவர் சமர்ப்பித்திருந்த பள்ளி கல்வி சான்றிதழ் செல்லாது என அந்நாட்டு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இவர் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில்படித்தவராக அறியப்படுகிறார். எனினும் முறையாக பள்ளிக்கல்வி முடித்ததற்கு இவரிடம் எந்த ஆதாரமும்இல்லை என நீதி மன்றம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் ?

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அனுமதியற்ற வழித்தடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கையைமீறிச் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் செயலிழந்ததாக ஈரான் புரட்சிகரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதற்கானசரியான காரணங்களை ஈரான் வெளியிடவில்லை.எனினும் ஈரான் கடற்படை வைத்துள்ள கடல் கண்ணி வெடிகளில் சிக்கி அவை பாதிக்கப்பட்டுஇருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அக்கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத ஏவுகணைகள் தாக்கியதாகபிரிட்டன் குறிப்பிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram