இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 51 பேர் பலி
2 hours before
<p><strong>இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 51 பேர் பலி</strong></p><p>ஜகார்த்தாதென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நாட்டின் கிழக்கு நுசா டெங்காரா மாகாணத்தில் சனியன்று 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தால் கிழக்கு இந்தோனேசியாவே குலுங்கியது. ஞாயிறன்று மாலை நிலவரப் படி, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 51 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் 75% அளவில் சேதமடைந்துள் ளன. 5,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு இடம்பெயர்ந் துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 3,500 ராணுவம் மற்றும் காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.’</p><p>341 நில அதிர்வுகள்சனியன்று நுசா டெங்காரா மாகாணத்தில் தொடர்ந்து 341 நில அதிர்வுகள் பதிவாகின. இதில் பெரும்பாலான நில அதிர்வுகள் மிக சாதரணமானது. ஆனால் 25ஆவது நில அதிர்வுக்குப் பிறகு7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வே பலத்த சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
