தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இந்தோ ஹெர்பல்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் எழுச்சியும் போராட்டமும்
5 Oct 2026, 9:39 pm

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இந்தோ ஹெர்பல்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் எழுச்சியும் போராட்டமும்

ஹரித்துவார்உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் சிட்குல் (SIDCUL) தொழில் மண்டலம் மீண்டும் ஒரு தொழிலாளர் எழுச்சிக்குக் களமாகியுள்ளது. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதப் தயாரிப்புகளில் முன்னணி வகிக்கும்‘இந்தோ ஹெர்பல் ப்ராடக்ட்ஸ்’ (Indo Herbal Products) ஆலைத் தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால நியாயமானகோரிக்கைகளை முன்வைத்து நடத்திய வேலைநிறுத்தம் மற்றும் அதன் வழியே எட்டப்பட்ட உடன்பாடுகள்முக்கியமானவை.

ஆலையின் பின்னணியும் கொந்தளிப்பின் காரணமும்

1991-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பல்வேறு புகழ்பெற்ற பிராண்டுகளுக்காகத் தோல், முடி பராமரிப்பு மற்றும்ஆயுர்வேதப் பொருட்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத் தொழிற்சாலையாகச் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு உறிஞ்சப்பட்டு வருகின்றனர்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான விலைவாசி உயர்வுக்கு மத்தியில், மாதச் சம்பளமாகக் குறைந்தபட்சம் ₹20,000வழங்கப்பட வேண்டும் மற்றும் 8 மணி நேர வேலைநேரம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மே 12 அன்று தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஹரித்துவார் தொழிற்பேட்டையில் அப்போது பரவி வந்த தொழிலாளர் எழுச்சியின் ஒரு பகுதியாக, இந்தோ ஹெர்பல் தொழிலாளர்களும் தங்களின்எதிர்ப்பை ஆலை வாயிலில் பதிவு செய்தனர்.

வீதியில் வெடித்த போராட்டம்

2026 மே 14 அன்று மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் பல ஆலைகளின் தொழிலாளர்களும் கைகோர்த்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதனால் உற்பத்திப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்டநிர்வாகமும் தொழிலாளர் துறையும் உடனடியாகத் தலையிட்டுப் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டன.நான்கு நாட்கள் நீடித்த இந்தத் தொழிற்சாலை முடக்கத்திற்குப் பிறகு, மே 18 அன்று நிர்வாகத்திற்கும் தொழிலாளர்பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:குறைந்தபட்ச ஊதியம் உறுதி: மாநில அரசின் திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதிய வழிகாட்டுதல்களின்படி, திறமையற்ற தொழிலாளர்களுக்கு ₹13,057, அரை-திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு ₹13,798 மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு ₹14,541 என அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, அதனுடன் ₹518 அகவிலைப்படியும்சேர்க்கப்பட்டது.

ஓவர் டைம் சுமைக்கு முற்றுப்புள்ளி: டிஜிட்டல் முறையிலான வருகைப் பதிவு கொண்டுவரப்பட்டு, கூடுதல் வேலை நேரத்திற்கான (Overtime) ஊதியம் இரட்டிப்பாக வழங்கப்படுவதும், கட்டாய இரட்டை ஷிப்ட் முறை ஒழிக்கப்பட்டு 8 மணி நேர வேலைநேரம் கடுமையாகப் பின்பற்றப்படுவதும் உறுதி செய்யப்பட்டது.அடிப்படை வசதிகள் மற்றும் காப்பீடு: கோடை வெயிலின் தாக்கத்தைத் தொழிலாளர்கள் சமாளிக்க ஏதுவாகத் தொழிற்சாலை உள்ளே உயர் திறன் கொண்ட குளிர்விப்பான்கள்மற்றும் விசிறிகள் பொருத்தப்பட்டன. மேலும், தங்களது பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பங்களிப்புகளைத் தொழி லாளர்கள்தாங்களே ஆன்லைன் மூலம் நேரடியாகச் சரிபார்க்கும் வசதியும் உரு வாக்கப்பட்டது.தொழிலாளர்கள் எதிர்பார்த்த முழுமையான ₹20,000 ஊதியக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வில்லை என்றாலும், முறையான கூடுதல் ஊதியம், இரட்டிப்பு ஓவர்-டைம் பலன்கள்மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தோ ஹெர்பல் தொழிலாளர்கள் தங்கள் ஒருமைப்பாட்டின் மூலம் வென்றெடுத்துள்ளனர். கார்ப்பரேட் ஆதிக்கத் திற்கு எதிரான இந்தப் போராட்டம் உத்தராகண்ட் தொழிலாளர் வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் லாகும்.தி லெப்ட் வியூஸ்