தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீனாவில்  இந்திய - அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு சீனாவிற்கான இந்தியத் தூதர்

11 Feb 2026, 2:34 pm
சீனாவில்  இந்திய - அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு சீனாவிற்கான இந்தியத் தூதர்
<p><strong>சீனாவில் &nbsp;இந்திய - அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு சீனாவிற்கான இந்தியத் தூதர்</strong> &nbsp;</p> <p>பிரதீப் ராவத் மற்றும் அமெரிக்கத் தூதர் டேவிட் பர்டூ ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது இந்திய - அமெரிக்க உறவுகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. &nbsp;பிப்ரவரி 11 அன்று &nbsp;தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்ட அமெ ரிக்கத் தூதர் டேவிட் பர்டூ, &ldquo;பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் குவாட் (Quad) கூட்டமைப்பு ஆகிய வற்றின் அடிப்படையில் &nbsp;நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் இந்திய - அமெரிக்க உறவு சில நல்ல முடிவுகளைத் தந்து வருகிறது,&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், &ldquo;எனது நண்பர் ராவத்தை சந்தித்து நமது இரு நாட்டின் நலன்கள் குறித்து விவாதிப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது,&rdquo; என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு இரு நாட்டுத் &nbsp;தூதர்களுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது சந்திப்பு ஆகும். இந்தியா மற்றும் அமெ ரிக்காவிற்கு இடையே சமீபத்தில் மேற் கொள்ளப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கத் தூதர கத்தில் நடைபெற்ற சந்திப்பில் பிரதீப் ராவத், டேவிட் பர்டூ மற்றும் ஜப்பான் தூதர் கென்ஜி கனசுகி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது &nbsp;வர்த்தகம், எல்லைப் &nbsp;பிரச்ச னையில் உறுதியான நிலைப்பாட்டை கடைபிடிப்பது தொடர்பாக &nbsp;இந்தியா - சீனா இடையில் பேச்சுவார்த்தை நடை பெறும் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந் துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.