முந்தய பக்கம்

நேபாளம்: கடும் பனிப்பொழிவில் சிக்கிய இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

2 Nov 2026, 4:27 pm
நேபாளம்: கடும் பனிப்பொழிவில் சிக்கிய இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
<p>நேபாளத்தின் ஷே-போக்சுண்டோ (Shey-Phoksundo) தேசிய பூங்கா பகுதியில், கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட 2 பெண்கள் உட்பட 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>இந்திய சுற்றுலாப் பயணிகள் 6 பேர், நேபாளத்தின் காத்மாண்டுவிற்கு வடமேற்கே சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள, ஷே-போக்சுண்டோ கிராமப்புற நகராட்சியின் 8-ஆவது வார்டில் உள்ள &#39;தோ&#39; பகுதிக்குச் சென்றிருந்தனர்.</p><p>கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், ஷே-போக்சுண்டோ ஏரியிலிருந்து திரும்பும் வழியில் அவர்கள் நும்லா மற்றும் வாக்லா கணவாய்களில் சிக்கிக்கொண்டனர். நவம்பர் 1-ஆம் தேதி முதல் இவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அன்றே ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரைத் தரையிறக்க முடியாமல் போனதால், மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து, கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட 2 பெண்கள் உட்பட 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram