இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட சிறப்பு பேரவை
16 Mar 2026, 4:46 pm
<p><strong>இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட சிறப்பு பேரவை</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 16- இந்திய மாணவர் சங்கத் தின் நாமக்கல் மாவட்ட சிறப்புப் பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட சிறப்புப் பேரவை கூட்டம், மாணவர் சங்க மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதனை மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் துவக்கிவைத்தார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்க நாமக்கல் மாவட்டச் செயலாளர் சரவணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி மற்றும் மூத்த தோழர் ஏ. ரங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். பேரவையில், மாவட்டத் தலைவராக முகமது நிசார், செயலாளராக தங்கராஜ், துணைத் தலைவர்களாக தனுஷ், யாழினி, பர ணீஸ்வரன், முஜீப் ரகுமான், இணைச் செய லாளர்களாக சதீஷ்குமார், பச்சை முத்து, ராஜேஷ்குமார், மகாலட்சுமி உள்ளிட்ட 33 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. பேரவையை நிறைவு செய்து மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பி னர் ஜி.கே.மோகன் உரையாற்றினார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட னர்.</p>
