இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு தின கொண்டாட்டம்
30 Dec 2025, 4:07 pm
<p><strong>இந்திய மாணவர் சங்கம் அமைப்பு தின கொண்டாட்டம் </strong></p>
<p>விழுப்புரம், டிச.30- விழுப்புரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதற்கான நிகழ்ச்சி மாணவர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மு.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் கா.வி.செம்மலர்,முன்னாள் மாவட்ட தலைவர் எஸ். பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல் அஜய்,மாவட்ட துணை செயலாளர் தீபன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரஷாந்த், தசரதன் உட்பட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
