தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2ஆவது நாளாக ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்

8 May 2026, 9:34 pm
2ஆவது நாளாக ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்

2ஆவது நாளாக ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்

மும்பை மேற்கு ஆசியாவில் அதி கரித்து வரும் பதற் றங்கள், எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத் தும் போன்ற அச்சங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை யால் இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் (BSE Sensex) 516.33 புள்ளிகள் அல்லது 0.66 சதவீதம் சரிந்து 77,328.19 புள்ளிகளில் நிலைபெற்றது.

ர்த்தகத்தின் போது, இந்த குறியீடு சுமார் 700 புள்ளிகள் வரை சரிந்து, அன்றைய குறைந்தபட்ச அளவான 77,146.43 புள்ளிகளைத் தொட்டது. அ

தே போல தேசிய பங்குச் சந்தையின் நிப்டி (NSE Nifty) 150.50 புள்ளிகள் அல்லது 0.62 சதவீதம் சரிந்து 24,176.15 புள்ளிகளில் முடிவடைந்தது. வ

ங்கிப் பங்குகள் சரிவு வங்கி, நிதித்துறை பங்குகள் வெள்ளியன்று கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தன.

பாரத ஸ்டேட் வங்கி தனது மார்ச் காலா ண்டு வருவாய் முடிவுகளை அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 6.62 சதவீதம் சரிந்தன.

ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்தன. ரூ.340.89 கோடி ஆசிய சந்தைகள் வெள்ளிக்கிழ மை கலவையான போக்குடன் ஆட்டம் கண்டன.

தென் கொரியா வின் கோஸ்பி சற்று உயர்ந்து முடி வடைந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய், சீனாவின் ஷாங்காய் காம்போசிட், ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.

குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளும் நஷ்டத் தில் வர்த்தகமாகின. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியா ழக்கிழமை ரூ.340.89 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.