இந்திய பங்குச் சந்தைகள் சரிவு
11 Jun 2026, 8:35 pm
<p><strong>இந்திய பங்குச் சந்தைகள் சரிவு</strong> </p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் பலவீனமான போக்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், வியாழனன்று ஆரம்பகட்ட வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தையின் முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் (மும்பை) மற்றும் நிப்டி (தேசிய) கடும் சரிவைக் கண்டன. வெளிநாட்டு நிதி முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவது, அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பாராவிதமாக அதிகரித்திருப்பது போன்றவையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வியாழனன்று ஆரம்பகட்ட வர்த்தகத்தில் 30 பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ (மும்பை பங்குச் சந்தை) சென்செக்ஸ் 358.54 புள்ளிகள் சரிந்து 73,624.64 ஆக இருந்தது. அதேபோல் 50 பங்குகளை உள்ளடக்கிய என்எஸ்இ (தேசிய பங்குச் சந்தை) நிப்டி 117 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,098.30 புள்ளிகளாகக் குறைந்தது.</p>
