ஓமனில் இந்தியக் கப்பல் எஞ்சின் கோளாறு?
14 Jun 2026, 9:15 pm

ஓமனில் இந்தியக் கப்பல் எஞ்சின் கோளாறு?

மஸ்கட், ஜூன் 14- ஓமன் கடற்பகுதியில் 14 இந்திய ஊழியர்களுடன் சென்ற ‘விராட் 1’ என்ற இந்திய வணிகக் கப்பல் திடீரென எஞ்சின் கோளாறால் பாதிக்கப்பட்டது.

ஆபத்தை உணர்ந்த ஊழியர்கள் அவசரக்கால ரப்பர் படகிற்கு மாறிய சூழலில், ஓமன் அதிகாரிகளின் ஒருங்கி ணைப்போடு அருகில் இருந்த ‘ஜபால் அலி 9’ கப்பல் மூலம் 11 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீதமுள்ள 3 ஊழியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு ஆசியப் பகுதியில் இந்திய மாலுமிகள் உள்ள வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இச்சம்பவம் நடந்துள்ளது.

ஏற்கனவே ‘செட்டெ பெல்லோ’ கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியானதை அடுத்து, புதுதில்லியில் உள்ள அமெரிக்க தூதரகப் பிரதிநிதி ஜேசன் மீக்ஸை இந்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அப்பகுதியில் ‘மரி வெக்ஸ்’, ‘ஜல்வீர்’ உள்ளிட்ட கப்பல்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளது நுகர்வோர் மற்றும் வர்த்தகப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறு த்தலாக மாறியுள்ளது.