ஓமன் அருகே இந்திய கப்பல் மீது தாக்குதல்
14 May 2026, 8:58 pm

ஓமன் அருகே இந்திய கப்பல் மீது தாக்குதல்

மஸ்கட்,மே14- ஓமன் கடற்கரை அருகே இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் பெர்பெரா துறைமுகத்தி லிருந்து ஷார்ஜாவிற்கு கால்நடைகளை ஏற்றிச்சென்ற ‘எம்எஸ்வி ஹாஜி அலி பிடிஐ 1492’ (MSV Haji Ali BDI 1492) என்ற குஜராத்தைச் சேர்ந்த கப்பல் ஹோர் முஸ் நீரிணை அருகே தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் கடலோர காவல்படையி னரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகை யில், இந்தியக் கப்பல் மீதான தாக்குதல் ஏற்க முடியா தது. வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளைக் குறி வைத்துத் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இது போன்ற தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்கள் நடந்த போது அந்நாடுகளை கண்டிக்காத இந்தியா தற் காப்புக்காக பதிலடித் தாக்குதல் நடத்திய ஈரானை மட்டும் கண்டித்தது. '

இந்நிலையில் கடந்த மாதம், ஹோர்முஸ் பகுதியில் இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்தியா தனது கவலை யைத் தெரிவித்திருந்தது. தற்போதைய தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இந்தியா இது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.