டிரம்ப் அரசு பொறுப்பு எனக் கூறுமா மோடி அரசு?
14 Jun 2026, 10:23 pm

டிரம்ப் அரசு பொறுப்பு எனக் கூறுமா மோடி அரசு?

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் புவிசார் ராணுவச் சூழ்ச்சிகளும், ஆக்கிரமிப்பு இராணுவத் தலையீடுகளும் உலக அமைதிக்கும் சாமானிய உழைக்கும் மக்களின் உயிர்களுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இதன் கோரமான விளைவாக, வளைகுடா பகுதியில் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே பயணித்த ‘எம்.டி செட்டபெல்லோ’ உள்ளிட்ட வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குத லில், அப்பாவி இந்திய மாலுமிகள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடலில் பணிபுரிந்த கப்பல் ஊழியர்களான ஆதித்யா சர்மா, சிவானந்த் சௌராசியா மற்றும் படனாலா சுரேஷ் ஆகிய மூன்று இந்திய உழைப்பாளி களின் மரணம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது என்பது அம்பலமாகியுள்ள நிலையிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வழக்கம் போல் உண்மை களைத் திசைதிருப்பும் நோக்கில் ஈரான் மீது பழிசுமத்தி நாடகமாடுகிறார். மறுபுறம், ஏகாதி பத்திய எஜமானனான அமெரிக்காவை கடுமை யாக கண்டிக்காமல் சிஐடியு அமைப்போடு இணைக்கப்பட்ட இந்திய ஃபார்வர்டு மாலுமிகள் சங்கத்தின் புள்ளிவிவரங்கள் இந்தப் போர்க்களச் சூழலில் இந்திய மாலுமிகள் சந்திக்கும் பேராபத்தை எச்சரித்த போதும் மோடி அரசு அதைப் புறக்கணித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்கத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து வெறும் “வலுவான எதிர்ப்பை” மட்டும் பதிவு செய்துவிட்டு, இந்த மரணங்களை ஏதோ தற்செயலாக நடந்த பாதிப்புகள் என மழுப்ப முயல்வது இந்தியக் குடிமக்களின் உயிருக்கு இந்த அரசு அளிக்கும் மதிப்பை அப்பட்டமாகக் காட்டுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சி, பல கப்பல்கள் வெளிநாட்டுப் பாவனைக் கொடிகளுடன் (Flags of convenience) இயங்கினாலும், தாக்குதலுக்குள்ளான மூன்று கப்பல்களும் இந்திய வர்த்தகத்துடனும், இந்தியப் துறைமுகங்களுடனும் ஆழமான தொடர்பைக் கொண்டவை ஆகும். இலாப வெறி பிடித்த கார்ப்பரேட்டுகளின் பாதுகாப்புக்காகப் பேசும் மோடி அரசு, போர்க்களத்தில் சிக்குண்டு தவிக்கும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை முற்றிலுமாகப் பலிகொடுத்து வருகிறது. இந்திய அரசு உடனடியாக இந்த அமெரிக்கத் தாக்குதலை திட்டவட்டமாகக் கண்டிக்க வேண்டும், இந்தியர்களின் மரணத்திற்குப் பொறுப்பேற்கக் கோர வேண்டும்.