முந்தய பக்கம்

ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!

3 Nov 2026, 4:00 pm
ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!
<p>ஒமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>ஓமன் கடற்பகுதியில் பயணித்த இந்தியக் கொடி பொருத்தப்பட்ட MSV Al Jusufi என்ற சரக்குக் கப்பல் மீது திடீரென வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் குஜராத்தை சேர்ந்த காந்தர் நஹீம் அஜீஜ் (26) என தெரியவந்துள்ளது. கப்பலில் பயணித்த எஞ்சிய 13 இந்திய மாலுமிகள் ஓமன் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், உயிரிழந்த மாலுமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கும், உயிர் பிழைத்துள்ள 13 மாலுமிகளுக்கு உடனடி உதவிகள் வழங்கி, அவர்களையும் விரைவாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram