இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்கிறது!
7 Oct 2026, 11:09 pm
<p><strong>இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்கிறது!</strong></p><p>இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியதால், கடந்த சில மாதங்களாகத் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை (அக். 6) அன்றுகடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு 96.42 ரூபாயாக வீழ்ந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை (அக்டோபர் 7) காலை வர்த்தகத்தில், வங்கிகளிடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் 96.37 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கிய ரூபாய், மேலும்22 பைசா சரிந்து 96.57 நிலையை எட்டியது.ஆசியா நாடுகளில் மிகவும் மோசமாகச் செயல்படும் நாணயமாக ரூபாய் உள்ளது. ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல்போர் தொடங்குவதற்கு முன்பே ரூபாய்மதிப்பு சரிந்து வந்த நிலையில், இந்தப் போர் அதன் வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த நெருக்கடி தொடர்ந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 100அல்லது அதற்கும் மேலாகக் குறையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.மோடி அரசாங்கம் பெரும்பாலும் ரூபாயின் பலவீனத்திற்கு மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி போன்றவெளிப்புற அழுத்தங்கள் மற்றும் காரணிகளை மட்டுமே காரணமாகக் காட்டுகிறது.</p>
