இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!
30 Apr 2026, 12:55 pm
<p>அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 பைசா சரிந்து, ரூ.95.20-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக, ஜூன் மாத விநியோகத்திற்கான எண்ணெய் விலை 6.2% அதிகரித்து $125.36ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் அமெரிக்க டாலர் குறியீடு (Dollar Index) 98.96-க்கு உயர்ந்தது. இதன் காரணமாக, இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 பைசா சரிந்து, ரூ.95.20-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 94.88-க்கு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>
