96.20 இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
18 May 2026, 9:18 pm
<p><strong>96.20 இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி</strong> </p><p>மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் சூழலில், திங்களன்று அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது. அதாவது இது வரை இல்லாத அளவாக 96.20 என்ற புதிய வரலாற்றுத் தாழ்வு நிலையுடன் வர்த்த கத்தைத் தொடங்கியுள்ளது இந்திய ரூபாய். இது முந்தைய வர்த்தக நிறைவை விட 0.2% சரிவாகும். </p><p>ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே முதன்மைக் காரணம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகை யில்,“ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான அறிக்கைக ளைத் தொடர்ந்து, திங்களன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 111 டாலராக உயர்ந்தது. இந்தியாவின் வர்த்த கப் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதும், மூலதன வரத்து குறைந்து வருவதும் இந்தியப் பொருளா தாரத்தை வெளிநாட்டுப் பாதிப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது. ரூபாயின் இந்த தொடர் சரிவு நாட்டின் ஒட்டுமொத்தப் பொரு ளாதாரக் கண்ணோட்டம் குறித்த கவலை களை மேலும் தீவிரமாக்கும்” என பங்குச் சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.</p>
