தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாகிஸ்தான் ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாய் 11.86 சதவிகிதம் சரிவு

19 May 2026, 8:58 pm
பாகிஸ்தான் ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாய் 11.86 சதவிகிதம் சரிவு

பாகிஸ்தான் ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாய் 11.86 சதவிகிதம் சரிவு

பாகிஸ்தான் ரூபாய்க்கு (PKR) நிகரான இந்திய ரூபாயின் (INR) மதிப்பு கடந்த 12 மாதங்களில் 11.86 சதவிகிதமாக சரிந்துள்ளது.

2025 மே 15, அன்று ஒரு இந்திய ரூபா ய்க்கு 3.2913 பாகிஸ்தான் ரூபாயாக இருந்த மாற்று விகிதம் 2026 மே 18, க்குள் 2.9010 பாகிஸ்தான் ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்த கடுமையான வீழ்ச்சியானது, இந்தியாவின் பொரு ளாதார சவால்கள் வெறும் உலகளாவிய டாலரின் வலிமையினாலோ அல்லது மேற்கு ஆசிய நெருக்கடியினாலோ மட்டும் ஏற்பட்டவை அல்ல.

மோடி தலைமையிலான பாஜக அரசின் மோசமான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாகமுமே காரணம் என்பதைக் காட்டுகிறது.

2025 ஆம் ஆண்டில் ஆசிய நாடுக ளிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக இந்திய ரூபாய் இருந்தது.

நடப்பு ஆண்டிலும் அவ்வாறே தொ டர்கிறது என பொருளாதார வல்லு நர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மட்டுமின்றி வங்க தேசத்தின் பணத்திற்கு நிகராகவும் இந்திய ரூபாய் 10 சதவிகிதம் வீழ்ச்சிய டைந்துள்ளது.

ஒரு ரூபாய்க்கு மாற்று மதிப்பாக 1.42 டாக்கா ஆக இருந்த நிலையில் அது 1.28 டாக்காவாகக் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10% சரிவாகும்.

ரூபாய் வீழ்ச்சிக்கு போர்கள் உள்ளிட்ட காரணங்களை சொல்லி தனது ஆட்சியில் உள்ள உண்மையான குறைபாடுகளை திட்டமிட்டு மறைக்கி றது மோடி அரசு.

பாகிஸ்தான் நாண யத்திற்கு எதிராக தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு, இந்தப் பிரச்சனை இந்தியா வுக்கு மட்டுமே உரியது என்பதை உணர்த்துகிறது.

இந்த சரிவு முற்றிலும் உலகளாவிய காரணிகளாலோ அல்லது டாலராலோ மட்டுமே ஏற்பட்டிருக்குமேயானால், அதன் தாக்கம் பிராந்தியத்தின் அனை த்து நாணயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்திருக்கும்.

பிற வளர்ந்து வரும் சந்தை நாணயங்களும் இதேபோன்ற அதிர்ச்சிகளை எதிர்கொண்ட போதிலும், அவை பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அளவுக்கு பலவீனமடையவில்லை என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.