இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு
10 Jan 2026, 2:48 pm
<p><strong>இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு</strong></p>
<p>திருப்பூர், ஜன. 10 - இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு 2025 - 26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான முதல் எட்டு மாத காலத்தில் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இந்திய ரூபாய் அடிப்படையில் 6.1 % (அமெ ரிக்க டாலர் அடிப்படையில் 2.3%) அதிக ரித்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா வின் 50 சதவிகித அபராத வரி விதிப்பு இருக்கும் நிலையில் இந்த உயர்வு ஏற் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விபரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம் பாட்டுக் கழகம் இது குறித்து தெரிவித் துள்ள விபரம் வருமாறு: கடந்த 2025 ஏப்ரல் முதல் நவம்பர் வரை எட்டு மாத காலத்தில் இந்தியா வின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மதிப்பு ரூ.87ஆயிரத்து 539 கோடியே 40 லட்சமாக பதிவாகி உள்ளது. முந்தைய 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில் ஏற்று மதி அளவு ரூ.82 ஆயிரத்து 515 கோடியே 40 லட்சம் ஆகும். கடந்த ஆண்டை ஒப்பி டும்போது தற்போது 6.1% ஏற்றுமதி அதி கரித்திருக்கிறது. அதேபோல் மாத வாரியாக கணக்கி டும்போது டிரம்ப் வரி உயர்வு ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வந்தது. அதை அடுத்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஏற்றுமதி அளவு சரிவைச் சந்தித்தது. எனினும் நவம்பர் மாதம் 17.1% அளவுக்கு வளர்ச்சி அடைந்துள் ளது. டிரம்ப் வரி விதிப்புக்கு முந்தைய ஐந்து மாத கால ஏற்றுமதி அளவின் கார ணமாக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 1.1% என்ற குறைந்தளவு வளர்ச்சி பெற்றி ருக்கிறது. அதேசமயம் போலந்து, இத் தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, யுஏஇ, நெதர் லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடு களுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேலும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவ வேற்றப்பட்டுள்ள நாடுகளில் ஜப்பா னுக்கு ஏற்றுமதி 27.9% அதிகரித்துள் ளது. தென் கொரியா, சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளுடனும் சற்று அதிகரித்துள்ளது. இந்திய ரூபாய் அடிப் படையிலான வளர்ச்சி அளவு 6.1 சதவி கிதமாக இருந்தாலும், சர்வதேச பரி வர்த்தனை என்ற முறையில் அமெரிக்க டாலர் அடிப்படையில் வளர்ச்சி அளவு 2.3% ஆக இருக்கிறது.</p>
