ரயில்வேயில் ஆட்குறைப்பு - பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகள்!
7 May 2026, 11:51 pm

ரயில்வேயில் ஆட்குறைப்பு - பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகள்!

இந்தியாவின் உயிர்நாடியாக விளங் கும் ரயில்வே துறை, தற்போது ஒன்றிய அரசின் தவறான நிர்வாக முடிவுகளால் நலிவடைந்து வருகிறது.

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற் பது, பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என பொதுத்துறை நிறு வனங்களை ஒவ்வொன்றாக சீரழித்து வரும் ஒன்றிய மோடி அரசு, தற்போது ரயில்வே துறையை தனது இலக்காக மாற்றியுள்ளது.

நிர்வாகத் திறனை மேம்படுத்துவ தாகக் கூறி, ரயில்வே வாரியம் தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய ரயில்வே யில் அங்கீகரிக்கப்பட்ட 14.80 லட்சம் பணியிடங்களில், இந்த 2 சதவீத நடவ டிக்கை மூலம் சுமார் 29,608 பணியி டங்கள் நிரந்தரமாக நீக்கப்படவுள்ளன.

பொதுப் போக்குவரத்து என்பது லாப நோக்கமற்ற ஒரு சேவைத்துறை என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக் கிறார்கள்.

கடந்த காலத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், தொழிலாளர்களின் உரிமை களைப் பறிக்காமல் இதே துறையை லாபகரமாக மாற்றிக் காட்டினார் என்பது வரலாறு.

ஆனால், தற்போதைய அரசு லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுவது வேதனைக்குரியது.

நாட்டில் வேலையில்லா திண்டாட் டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருக்கும் வேலையையும் பறிக்கும் அரசின் செயல் இளைஞர்களை ஆவேச மடையச் செய்துள்ளது.

ஆண்டு ஆள் சேர்ப்பு காலண்டர் (Annual Recruit ment Calendar) என்ற பெயரில் கண்து டைப்பு நடவடிக்கைகளை அரசு மேற் கொள்கிறது.

2026-ஆம் ஆண்டு குரூப்-டி பிரிவில் வெறும் 22,000 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ரயில் வேயில் தற்போது 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை காலிப் பணியிடங்கள் உள் ளன.

2025-26 நிதியாண்டில் லோகோ பைலட், டெக்னீசியன் என வெறும் 28,463 இடங்களே அறிவிக்கப்பட்டுள் ளன.

பெரும்பாலான பராமரிப்புப் பணி கள் வெளி முகமை (Outsourcing) முறைக்கு மாற்றப்படுவதால், நிரந்தரப் பணியிடங்கள் திட்டமிட்டு ஒழிக்கப்படு கின்றன.

பாதுகாப்பும் தொடரும் விபத்துகளும் ஊழியர் பற்றாக்குறை என்பது வெறும் வேலைவாய்ப்புப் பிரச்சினை மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான தாகும்.

போதிய ஊழியர்கள் இல்லாத தால், லோகோ பைலட் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணி யாளர்களுக்கு அதீத வேலைப்பளு ஏற்படு கிறது.

கடந்த பத் தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரயில் விபத்துகளால் உயி ரிழந்தவர்களின் எண் ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது.

2016: இந்தூர் - பாட்னா விரைவு ரயில் விபத்தில் 150 பேர் பலி.

2017: கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 23 பேர் பலி. 2023: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2024 - 2026: பல்வேறு சிறிய மற்றும் நடுத் தர விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வரு கின்றன.

இந்த விபத்துகள் குறித்து நடத்தப் பட்ட ஆய்வுகளில், சிக்னல் குறைபாடு கள் மற்றும் ஊழியர்களின் கடும் மன உளைச்சல், ஓய்வில்லாத வேலை (Hu man Error due to fatigue) ஆகிய வையே முதன்மை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஊழியர் பற் றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் ஆட்குறைப்பு செய்வது, எதிர்காலத்தில் மேலும் பல விபத்துகளுக்கு வழிவகுக் கும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின் றன.

ரயில்வேயை பாதுகாப்பானதாக வும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் மாற்ற வேண்டுமானால், காலிப் பணியிடங் களை உடனடியாகப் போர்க்கால அடிப் படையில் நிரப்ப வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்ப டுத்தும் அதே வேளையில், அதை இயக்க தகுதியான மனித வளத்தை குறைப்பது தற்கொலைக்குச் சமமா னது.

லட்சக்கணக்கான இளைஞர்க ளின் கனவையும், கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இதன் அவசர, அவசியத்தை உணர்ந்தே தமிழகம் முழுவதும் இடது சாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு கிறது. (ந.நி)