தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

28 Oct 2026, 8:26 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

ரயில்வேயில் 1688 காலிப் பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் கிளர்க்/டைபிஸ்ட் பணிகளுக்கு 1688 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி – பிளஸ் 2 வில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – ஜனவரி 1, 2027 ஆம் தேதியின்படி குறைந்த பட்சமாக 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்சமாக 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வானது இரண்டு கட்டங்களாக ஆன்லைனில் நடைபெறும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சுத் திறன், சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் - பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ. 250 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை – எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்விற்கான பாடத்திட்டம், காலி பணியிட பகிர்வு. வயதுவரம்பு போன்ற முழுமையான தகவல்களை பெற https://rrb.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் முழுமையான அறிவிக்கையைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 13, 2026 ஆகும்.

ரயில்வேயில் 1,265 ஸ்டேஷன் மாஸ்டர் காலிப் பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு 1,265 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை CEN 08/2026 வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதி முடிவுகள் வராதவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். பட்டப்படிப்பு சான்றிதழ் நவம்பர் 25, 2026-க்கு முன் பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு – ஜனவரி 1, 2027-ஆம் தேதியின்படி 20 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு முறை – கணினி வழித் தேர்வு (CBT), கணினி வழித் திறனறித் தேர்வு (CBAT), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை – எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்விற்கான பாடத்திட்டம், காலி பணியிட பகிர்வு. வயதுவரம்பு போன்ற முழுமையான தகவல்களை பெற https://rrb.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் முழுமையான அறிவிக்கையைப் பார்வையிடலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 25, 2026.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) அப்ரண்டிஸ் பயிற்சி

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ITI மற்றும் பட்டதாரி (Non-Engineering) அப்ரண்டிஸ்1067 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கானஅறிவிக்கை L&DC/04/2026 வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி - ஐடிஐ (ITI) தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (B.Com/B.Sc/B.A/BBA/BCA) முடித்திருக்கவேண்டும்.வயது வரம்பு – அரசு விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொது, ஓபிசி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில்தளர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு முறை – தகுதித் தேர்வில் (ITI / Degree) பெற்ற மதிப்பெண்களின் (Merit List) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை – எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்விற்கான பாடத்திட்டம், காலி பணியிட பகிர்வு. வயதுவரம்பு போன்ற முழுமையான தகவல்களை பெற https://www.nlcindia.in/ என்ற இணைய தளத்தில் முழுமையான அறிவிக்கையைப் பார்வையிட லாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 9, 2026

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.