விளையாட்டு
5 Jun 2026, 2:01 am

உலகக்கோப்பை கால்பந்து 2026 கத்தார் அணிக்காக களமிறங்கும் இந்தியர்

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் கத்தார் நாட்டின் 26 பேர் கொண்ட தேசிய அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் தச்சின் முகமது ஜம்ஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தச்சின் முகமது ஜம்ஷீத் கேரள மாநிலம் கண்ணூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். கத்தாரின் தோஹாவில் பிறந்து வளர்ந்த தச்சின், சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஈர்ப்பால் அங்குள்ள அகாடமிகளில் தீவிர பயிற்சி பெற்றார். தற்போது கத்தாரின் புகழ்பெற்ற முன்னணி கால்பந்து கிளப்பான அல்-துஹைல் அணிக்காக விளையாடி வரும் அவர், தனது அசாத்திய திறமையால் மிகக் குறுகிய காலத்திலேயே கத்தார் நாட்டின் தேசிய அணியின் கவனத்தை ஈர்த்தார். 19 வயதே ஆன போதிலும், இவரது அபாரமான ஆட்டத்திறன் காரணமாக உலகக்கோப்பைக்கான கத்தாரின் 26 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்திய தேசிய அணி இதுவரை உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடியதில்லை என்ற ரசிகர் களின் நீண்டகால ஏக்கத்திற்கு மத்தியில், மற்றொரு நாட்டின் தேசிய அணிக்காக இருந்தாலும், உலகக்கோப்பை மேடையில் கால்பதிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமை யைத் தச்சின் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக தேர்வாகியுள்ள இலங்கை தமிழர்

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதன் முறையாக, ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் விளையாடு வதற்காக இலங்கை தமிழர் வம்சாவளி யைச் சேர்ந்த 25 வயது இளம் வீரர் நிஷான் வேலுப்பிள்ளை தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் பிறந்த நிஷான் வேலுப் பிள்ளையின் பெற்றோர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிறுவயது முதலே கால்பந்து விளை யாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிஷான், தனது அசாத்திய திறமையால் உள்ளூர் கிளப் போட்டிகளில் அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் முன்னணி கால்பந்து கிளப்பான மெல்போர்ன் விக்டரி அணியில் இடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொண்ட நிஷான் பார்வர்ட், விங்கர் பொசிஷனில் நன்றாக விளையாடி உலகக்கோப்பையில் களமிறங்க உள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முன்னணி வீராங்கனைகள் இல்லாமல் மகளிர் ஒற்றையர் அரையிறுதி

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னணி வீராங்கனைகள் இல்லாமல் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடந்துள்ளன. அதாவது மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் டாப் 5இல் உள்ள வீரா ங்கனைகள் இல்லாமல், நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். புதனன்று இரவு டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரா ங்கனையான பெலாரசின் சபலென்கா 6-3, 5-7, 0-6 என்ற செட் கணக்கில் தர வரிசையில் 25ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டையானாவிடம் வீழ்ந்தார். இதனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.