தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வதேச கடற்படை அணிவகுப்பில் இந்திய கடற்படை கப்பல்கள் பங்கேற்பு

30 Nov 2025, 4:29 pm
சர்வதேச கடற்படை அணிவகுப்பில் இந்திய கடற்படை கப்பல்கள் பங்கேற்பு
<p><strong>சர்வதேச கடற்படை அணிவகுப்பில் இந்திய கடற்படை கப்பல்கள் பங்கேற்பு</strong></p> <p>கொழும்பு,நவ.30- இலங்கை கடற்படை தனது 75வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொழும்பில் நடத்தும் சர்வதேச கடற் படை அணிவகுப்பு &nbsp;2025 நிகழ்வில், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் உள்நாட் டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய போர்க்கப் பல்கள் இந்திய கடற் படையின் சார்பில் பங்கேற் றுள்ளன. சனிக்கிழமை வரை (நவ.29) அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பல &nbsp;நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், தூதுக்குழுக்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்திய கப்பல்களின் இந்த பயணம் இரண்டு கப்பல் களுக்கும் முதல் வெளி நாட்டுப் பயணம் ஆகும். இது பிராந்திய கடல்சார் &nbsp;ஒத்துழைப்பை வலுப்படுத் துவதில் இந்தியா கொண்டுள்ள உறுதியை &nbsp;காட்டுகிறது. &nbsp;இந்தியாவின் பெருமை யையும், உள்நாட்டுத் தயா ரிப்பையும் பறைசாற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதல் சர்வதேச அணிவகுப்புப் பங்கேற்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் &nbsp;உள்ள நட்பு கடற்படைகளுடன் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஈடுபாட்டை வலியுறு த்துகிறது. மேலும், இது ஒத்து ழைப்பு மற்றும் இயங்கு திறன் மூலம் அமைதி, ஸ்திரத் தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இந்தியா முக்கியத்துவம் அளிப் பதையும் பிரதிபலிக்கிறது. சமீபத்தில் இந்தியக் கடற் படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரியின் பங்கேற்பு, இந்தியாவின் மேம்பட்ட உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களையும், இந்தியப் பெருங்கடல் பிரா ந்தியத்தில் அதன் சீரான, விரி வடைந்து வரும் இருப்பையும் வெளிப் படுத்துகிறது. கொழும்பில் இருக்கும் போது, இந்தக் கப்பல்கள் சர்வதேச கடற்படை அணிவகுப்பிலும் பங்கேற்கின்றன. பொதுமக்கள் பார் வைக்கு அனுமதிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதி யாக, ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய கிரி கப்பல்கள் பார்வையா ளர்களுக்காக &nbsp;திறந்துவிடப் பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.