தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

21 Jul 2026, 11:37 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

இந்திய கடற்படையில் அதிகாரிப் பணிகள் 275

இந்திய கடற்படையில் Short Service Commission (SSC) Officer – Jun 2027 அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. Executive Branch, Education Branch மற்றும் Technical Branch ஆகிய பிரிவுகளில் மொத்தம் 275 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம். கல்வித் தகுதி – BE / B.Tech, M.Sc., MCA, M.E./M.Tech உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள்ன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தேவையான கல்வித் தகுதி மாறுபடும். வயது வரம்பு – 02 ஜூலை 2002 முதல் 01 ஜனவரி 2008க்குள்(இரண்டு தேதிகளையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் எஸ்.எஸ்.பி. (SSB) நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு முறை, காலியிட விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜுலை 27, 2026 ஆகும்.

சுகாதாரத் துறையில் பணிகள்

தேசிய சுகாதாரத் திட்டத்தில் (NHM) Consultant, Assistant Engineer, Junior Engineer, Biomedical Engineer, Intern உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.E./B.Tech, M.E./M.Tech, M.Sc., MBA, MCA, MBBS, BDS உள்ளிட்ட கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35, 40 அல்லது 45 வயதிற்குள் (பணியிடங்களுக்கு ஏற்றவாறு) இருக்க வேண்டும். CBT தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க https://nhm.tn.gov.in இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜுலை 23, 2026.

ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி (Combined Technical Service Examination) தேர்வின் மூலம் ITI/ diploma படித்தவர்களுக்கான 839 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி – ஐடிஐ/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் முழுமையான கல்வித் தகுதி விவரம் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு – பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிக பட்சம் 32/34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (Counselling) ஆகியவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். ஓரிரு பணியிடங்களுக்கு உடற்தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக்கட்டணம் – பொது/ ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – எழுத்துத் தேர்விற்கான பாடத் திட்டம், தேர்வு முறை, மதிப்பெண்கள் விபரம், காலியிடப் பகிர்வு மற்றும் பிற தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்வையிடலாம். முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 15, 2026 ஆகும். ஜூலை 17, 2026 முதல் விண்ணப்பங்களை நிரப்புவது தொடங்குகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.