இந்திய கடற்படை தினம் போர் நினைவு சின்னத்தில் மரியாதை
4 Dec 2025, 3:52 pm
<p><strong>இந்திய கடற்படை தினம் போர் நினைவு சின்னத்தில் மரியாதை</strong></p>
<p>சென்னை, டிச.4- கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அயராது உழைக்கும் கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பு இந்நாளில் நினைவு கூரப்படுகிறது. இந்திய கடற்படை ஆற்றியுள்ள சாதனைகள் மற்றும் உழைப்பினை அங்கீ கரிக்கும் விதமாக ‘இந்திய கடற்படை தினம்’ வியாழனன்று (டிச.4) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது. குறிப்பாக, கடற்படை வீரர்களை கௌரவிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. அதே போல, தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் வருடந்தோறும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், கடற்படை போர் நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிப்பட்டு இருந்தது. தொடர்ந்து, இந்திய ராணு வத்தின் தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜென ரல் வி.ஸ்ரீஹரி மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சி யில் முன்னாள் கடற்படை வீரர்கள், போரில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தி னர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>
