தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரும்பான்மைச் சமூகத்தில் சமத்துவம் தேடி..! - டாக்டர் ஹமீது அன்சாரி

30 Aug 2026, 9:28 pm
பெரும்பான்மைச் சமூகத்தில் சமத்துவம் தேடி..! - டாக்டர் ஹமீது அன்சாரி

பெரும்பான்மைச் சமூகத்தில் சமத்துவம் தேடி..! - டாக்டர் ஹமீது அன்சாரி

இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கல்வி, பொருளாதாரப் பின்தங்கிய நிலையைத் தாண்டி, பாதுகாப்பு, சம வாய்ப்பு, சமூக ஏற்பு ஆகியவை தொடர்பான கேள்விகளாக விரிவடைந்துள்ளன; இவை சமத்துவம், சகோதரத்துவம்பேணும் அரசமைப்புச் சட்டஉறுதிமொழிக்கே சவாலாகியுள்ளன.

எண்ணிக்கையில் சிறுபான்மை, சட்டத்தில் சமமானவர்

இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்கள் இந்தியக் குடிமக்களே. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் அவர்களின் பங்கு 14.22 சதவீதம். எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் சிறுபான்மையினர்தான்; ஆனால் சட்டத்தின் முன் சமமானவர்கள், அரசமைப்புச் சட்ட ரீதியாக சகோதரத்துவம் மிக்கவர்கள். கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகளாக அவர்களது மத நம்பிக்கை இந்திய பன்மத, பன்முகச் சமூ

கக் கட்டமைப்புடன் பிணைந்துள்ளது.

இஸ்லாமிய அறிஞர் அப்துல் ஹசன் அலி நத்வி குறிப்பிடுவது போல், “இந்தியச் சூரியனின் கீழே தங்களுக்குரிய கண்ணியமான இடத்தைப் பெறுவதில் முஸ்லிம்கள் தீர்மானகரமாக உள்ளனர்.” பல தசாப்தங்களுக்கு முன் வில்பிரட் காண்ட்வெல் ஸ்மித், இந்திய முஸ்லிம் சமூகம் புறச் சூழல்களால் அதிர்ச்சியடைந்தும், அகவயரீதி

யாக முடங்கியும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்; அதன் எதிர்காலம் மட்டுமன்றி, இந்திய -இஸ்லாமியத்தின் எதிர்காலமும் இந்தச் சவால்களை அச்சமூகம் எவ்வளவு திறமையுடன் எதிர்கொள்கி றது என்பதைப் பொறுத்தே அமையும் என்றார்.

வரலாற்றுப் பின்னணி

இப்பிரச்சனைகளுக்குப் பழைய வேர்கள் உண்டு. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து-முஸ்லிம் உறவுகள் (1923-28)குறித்து ஆய்வு செய்த ஜி.ஆர். தர்ஸ்பி, வகுப்புவாதம் எனக் கருதப்பட்ட 112 கலவரங்களை பசு மோதல்கள்,மசூதிகள் முன் இசைக்கருவி இசைத்தல், சுத்தி-சங்கதன்இயக்கங்கள் என வகைப்படுத்தினார்; 1932 வகுப்புவாரி இடஒதுக்கீட்டுடன் சேர்த்து இவை பிரிவினை நோக்கிய பாதையின் அடையாளங்களாக மாறின. நாடுபிரிவதற்கு முன்பே, முஸ்லிம்களின் சமூகப் பின்தங்கிய நிலைக்கான அரசியல் காரணம், இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் சூழலில் தாங்கள் மூழ்கடிக்கப்படுவோம் என்ற அச்சமே என்று 1940-இல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சுட்டிக் காட்டியிருந்தார்.

சுதந்திரம் அடைந்த எழுபது ஆண்டுகளிலும் இந்த அதிருப்தி தொடர்ந்தது. 1954 ஏப்ரல் 26-இல் மாநில முதல்வர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு எழுதிய கடிதத்தில், அரசமைப்புச் சட்டமும் சட்டங்களும் நியாயமானவை எனினும், பாதுகாப்பு, காவல்துறை, சிவில் சேவைகளில் முஸ்லிம்களுக்கு நியாயமான வாய்ப்புகிடைக்கவில்லை என்றும்,தேர்தல்களிலும் பொதுநிறுவனங்களிலும் அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்துவருவதாகவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.

சச்சார் குழு: பொய்களுக்கு முற்றுப்புள்ளி

பல்லாண்டு போராட்டங்களுக்குப் பின், இந்திய முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமை குறித்து ஆய்வு செய்ய 2006-இல் ராஜீந்தர் சச்சார் குழுநியமிக்கப்பட்டது. கல்வி, திறன் வளர்ப்பு, வங்கிக் கடன்,வளர்ச்சி முன்முயற்சிகள், வக்பு நிர்வாகம் உள்ளிட்ட பரிந்துரைகளை அது வழங்கியது. முஸ்லிம் சமூகத்தின்நிலைமை பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு நிகராக அல்லதுஅதைவிட மோசமாக உள்ளதாக அக்குழுஉறுதிசெய்தது; அவர்கள் “இரண்டாம் தரக் குடிமக்களாக ஆகிவிடும் ஆபத்து” உள்ளதாகவும்எச்சரித்தது.

சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற 2008ல் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, பன்முகத்தன்மைக் குறியீடு, சம வாய்ப்புக் குழு அமைக்கும் தேவையை வலியுறுத்தியது; ஏற்றத்தாழ்வான பொருளாதார வாய்ப்புகள்அரசியல்அதிகாரத்திலும் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, ஒரு விஷச் சக்கரமாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டியது.2014 அமிதாப் குண்டு தலைமையிலானகுழுவின் அறிக்கை சச்சார் குழு பரிந்துரைகள் அமலாக்கத்தை ஆய்வுசெய்து “தொடக்கம் ஏற்பட்டுள்ளது, ஆனால்தடைகள் நீடிக்கின்றன” என்றும், சமூகத்தின்வளர்ச்சி பாதுகாப்பு உணர்வின் அடித்தளத்தில்தான் சாத்தியம்என்றும் வலியுறுத்தியது.

சச்சாரின் 76 பரிந்துரைகளில் 72 ஏற்கப்பட்டன; வகுப்புவாத வன்முறை (தடுப்பு, கட்டுப்பாடு, பாதிக்கப்பட்டோர்மறுவாழ்வு) மசோதா 2005-உம் அதில் அடங்கும். ஆனால் இருபது ஆண்டுகள் கடந்தும் அது சட்டமாகவில்லை - இது அரசியல் உறுதியின்மையின் தெளிவான அடையாளம் ஆகும். மதரசாக்கள்எண்ணிக்கை உயர்வு, வக்பு ஒதுக்கீடு, சிறுபான்மை உள்ளாட்சிப் பிரதிநிதித்துவம் போன்ற மற்ற நடவடிக்கைகள்மேற் கொள்ளப்பட்டன.

2013 நவம்பரில், சச்சார் குழுவே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, முஸ்லிம்களுக்கு மட்டும் உதவுவதேஅதன் நோக்கம் என மோடி தலைமையிலான குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது - அப்போதையஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு நேர்எதிராக.

இன்று எதிர்கொள்ளும்

நான்கு முக்கியச் சவால்கள்அரசாணைகள், ஆய்வுகளின் தொகுப்பில் இருந்து பார்க்கும்போது, இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும்பிரச்சினைகள்: அடையாளம்-பாதுகாப்பு, கல்வி-அதிகாரமளித்தல், அரசு வளங்களில் சம பங்கு, முடிவெடுத்தலில்நியாயமான பங்கு என நான்கு வகைப்படும்.பாடத்திட்ட மாற்றங்கள் மூலம் சிறுபான்மை

யினரின் அடையாளம் திரித்து எழுதப்படு கிறது; பெரும்பான்மையினரின் நல்லெண்ணத் தால்தான் முஸ்லிம்கள்வாழ முடிகிறது எனும் கருத்து பரப்பப்படுகிறது. பாதுகாப்பு தொடர்பில்,தேசிய குற்றப் பதிவு காப்பகம் தரவுப்படி, மொத்த விசாரணைக் கைதிகளில் 20 சதவீதம் பேர் முஸ்லிம்கள் - அவர்களது 14-15 சதவீத மக்கள்தொகை விகிதத்தை விட அதிகம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட வழக்குகளிலும் இதே நிலைதான்;பிணை உத்தரவாதம் பெறுவதிலும் பலர் சிரமப்படுகின்றனர்.

மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் 1991, ஆகஸ்ட் 15, 1947 நிலையை மத வழிபாட்டுத் தலங்களில் பேணும் என்று சொன்னாலும், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தர்காக்கள், பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு ஆட்சேபனைகள், மசூதி ஒலிப்பெருக்கிகள், வக்பு வாரியச் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவது கடந்த ஜூன் மாத அனைத்து முஸ்லிம் அமைப்புகள் கூட்டத்தில்கடும் கவலையை எழுப்பியது; தேசிய அளவிலான இயக்கம் ஒன்றை நடத்த அக்கூட்டம் முடிவெடுத்தது.

குற்றம்சாட்டப்பட்டோரின் - நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாதோர் உட்பட - சொத்துக்களை இடிக்கும் “புல்டோசர் நீதி” பல மாநிலங்களில் தொடர்கிறது; உச்சநீதிமன்ற தலையீடும் பயனுள்ளதாக இல்லை. 1981-இலேயே அரசு உயர்அதிகாரி சி.பி. ருஸ்தாம்ஜி, சட்டம்-ஒழுங்கு இயந்திரம் வகுப்புவாதமயமாகியிருப்பதால் கலவரங்களின்இலக்கானோரைப் பாதுகாக்க முடியவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தார். 2013 முசாபர்நகர், 2020 தில்லி கலவரங்கள் இதற்கு சான்று. 2025-இல் மட்டும், தில்லி, ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 21மாநிலங்களில் சிறுபான்மையினரை - குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை - இலக்காகக் கொண்ட 1,318 வெறுப்பு பேச்சுநிகழ்வுகள் பதிவாகியுள்ளன; சராசரியாக நாளொன்றுக்கு நான்கு நிகழ்வுகள். இது 2024-ஐ விட 13 சதவீதமும், 668நிகழ்வுகள் பதிவான 2023-ஐ விட 97 சதவீதமும் அதிகம் - வெறுப்பு என்பது நிறுவனமயமாகி வருவதற்கான அறிகுறி. சமூக வலைத்தள குழுக்கள் இத்தகைய பரப்புரைக்கான முக்கிய தளங்களாக மாறியுள்ளன.

மக்கள்தொகை வளர்ச்சி, மதமாற்றம், கலப்புத் திருமணங்கள், “லவ் ஜிஹாத்”, “நில ஜிஹாத்”, எல்லை தாண்டிய ஊடுருவல் குறித்து புரிதல் இல்லாத, திரிக்கப்பட்ட அச்சங்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன; பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் தொடர்கிறது. அசாம், மேற்குவங்க தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத்

தீவிர திருத்தம் (SIR) குறித்த கவலைகள் எழுந்துள்ளன; சிறுபான்மையினர் மக்கள்தொகை அதிக வளர்ச்சி விகிதத்தில் உள்ளதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு போதிய தரவு ஆதாரம் இல்லை என்றபோதும், முஸ்லிம் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்கு அது தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

பொருளாதார, சமூக அளவில், மத அடிப்படையில் வணிக நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு, அரசுப் பணிகளில் - குறிப்பாக ராணுவத்தில் - குறைவானபிரதிநிதித்துவம் ஆகியவை ஓரங்கட்டலின் அடையாளங்கள் ஆகும். பல பத்தாண்டுகளாக முஸ்லிம் சமூகங்கள் வேலைவாய்ப்பு, கல்வியில் பாகுபாட்டையும், செல்வம் மற்றும் அரசு அதிகாரம்அடைவதில் தடைகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

2014-க்குப் பின்: புதிய அரசியல் சூழல்

2014 பாஜக வெற்றி, வெகுஜனவாதம் மேலோங்கிய “இனவாத ஜனநாயகம்” என்னும் புதிய கட்டத்திற்கு இந்தியாவை நகர்த்தியது; இது நடைமுறையில் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கும் போக்கைக் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. இயல்பான சமூக சகோதரத்துவத்தின் மீது இது ஏற்படுத்தும் தாக்கம் பல பகுதிகளில் தெளிவாகத்தெரிகிறது.

பிரதமர் மோடி முன்வைத்த “சப்கா சாத், சப்கா விகாஸ்” முழக்கத்தில், அனைவரும் ஒரே தொடக்க வரியில் நின்று சமமாகப் போட்டியிடவேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்பட வில்லை; பெரும்பான்மைக்கு எது நல்லதோ அது எல்லோருக்கும்நல்லதாக இருக்கும் என்ற முன்முடிவே உள்ளடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அரசியல் விஞ்ஞானிகள் டி.எல். ஷேத், அஷிஸ் நந்தி ஆகியோர் 1995-இலேயே சுட்டிக்காட்டியது போல், அரசின் வலுக்கட்டாய ஒருங்கிணைப்பு முயற்சிக்கும், அதை எதிர்க்கும் அரசியல்- கலாச்சார சக்திகளின் எதிர் நிலைக்கும் இடையிலான முரண்பாடே இன்றைய இந்திய அரசியல்அமைப்பின் மைய பிரச்சனை - அன்று எழுதப்பட்டதை விட இன்று இது மேலும் பொருந்து கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸில் நீரஜா சவுத்ரி எழுப்பிய கேள்விமுக்கியமானது: “20 கோடி முஸ்லிம்களை ஒதுக்கிவைத்து விட்டு 2047 விக்சித் பாரத் கனவு நனவாக முடியாது.”

திருத்த வழிகள்: மூன்று தரப்பு பொறுப்பு

தீர்வு மூன்று தரப்பினரிடமும் உள்ளது: முஸ்லிம் சமூகம் தன் பன்முகத்தன்மையுடன்; அரசும் அதன் நிறுவனங்களும்; மற்றும் பரந்த சமூகம். மொத்தமுள்ள 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் - 15மாநிலங்களில் 9 சதவீதத்திற்கு மேலும், அவற்றுள் 12-இல் 10 சதவீதத்திற்கும் மேலாக முஸ்லிம் மக்கள்தொகை உள்ளது. இதில் சன்னிகள் 85-90 சதவீதம்; ஷியாக்கள் 10-15 சதவீதம்- சுமார் 2 கோடி பேர்.

தாவூதி போஹ்ரா முஸ்லிம்கள் 5 லட்சமும், அகமதியர்கள் 10 லட்சமும் என மதிப்பிடப்படுகின்றனர்.சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவுகள் கலாச்சார ரீதியான தற்காப்பு மனநிலையில் சிக்கியிருப்ப தாலும், மரபை பகுத்தறிவு ரீதியாக மறுபரிசீலனை செய்யாமல்புனிதமாக்குவதாலும், சுய முன்னேற்றம் தடைபடுகிறது. மாறிவரும் தேவைகளுக்கேற்ப தகவமைக்கும் இஸ்லாமிய இஜ்திஹாத் கோட்பாடு புறக்கணிக்கப்படுகிறது; அது “வாழ்வின் மாறும்தேவைகளை எதிர்கொள் ளும் ஆற்றல்” எனும் அதன் அடிப்படை நோக்கமே மறக்கப்படுகிறது.

கல்வியில் தொடரும்பின்தங்கிய நிலை

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் மக்கள்தொகையில் 42.72 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள்; படித்தோரில் 2.76 சதவீதம் மட்டுமே பட்டதாரிகள். உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரி 22.3சதவீதமாக இருக்க, முஸ்லிம்களின் சேர்க்கை வெறும் 5.2 சதவீதம். பெண்கள் தொழிலாளர் பங்களிப்பில் தேசியசராசரி 70 சதவீதமாக இருக்க, முஸ்லிம் பெண்களில் அது 29 சதவீதமே. ஊரக முஸ்லிம் பெண்களில் 34.7 சதவீதமும்,நகர்ப்புற பெண்களில் 19.8 சதவீதமும் பள்ளிக்கே சென்றதில்லை.

இந்தத் தரவுகள், கல்விக்கும் வேலைவாய்ப்பு, வருமானம், செல்வ உருவாக்கத்திற்கும் இடையிலான நேரடித் தொடர்பை உறுதிசெய்கின்றன. சிறுபான்மையினருக்கான அரசுத் திட்டங்கள் பல இருந்தாலும்,சமூகத்தின் அளவுக்கும் தேவைக்கும் அவை போதுமானதாக இல்லை. எனவே, முஸ்லிம் அல்லாத சிறுபான்மைசமூகங்கள் - குறிப்பாக கிறிஸ்தவ, சீக்கிய சமூகங்கள் - சுய முயற்சியில் கல்வி நிறுவனங்களை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துகின்றன என்பதிலிருந்து பாடம் கற்பதும் அவசியம்.

இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம், இச்சவால்களை அவர்கள் எவ்வளவு விவேகத்துடன் எதிர்கொள்கிறார்கள் என்பதிலும், அரசும்சமூகமும் அரசமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை எவ்வளவு நேர்மையாகக்காப்பாற்றுகின்றன என்பதிலும் தங்கியுள்ளது. அறிஞர் ஏ.ஜி. நூரனி முன்பே குறிப்பிட்டது போல், “பாகுபாட்டு எதார்த்தங்களை மறுப்பதும், எல்லாம் நன்றாக இருப்பதாகப் பாவனை செய்வதும்” உண்மைகளை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதே ஆகும். இந்தியாவின் பன்மைத்துவம் நாட்டை ஒருங்கிணைத்து வைப்பது மட்டுமல்ல, அதன் ஜனநாயகத்தின் இன்றியமையாதபகுதியும்கூட.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.