புலிட்சர் விருது வென்ற இந்திய பத்திரிகையாளர்கள்!
5 May 2026, 7:25 pm
<p>2026 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது இந்திய பத்திரிகையாளர்களான ஆனந்த் ஆர்.கே மற்றும் சுபர்ணா ஷர்மா ஆகியோர் வென்றுள்ளனர்.</p><p>புலிட்சர் விருது என்பது பத்திரிகைத்துறை, இலக்கியம் மற்றும் இசை போன்ற துறைகளில் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். இது 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, தற்போது 23 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது இந்திய பத்திரிகையாளர்களான ஆனந்த் ஆர்.கே மற்றும் சுபர்ணா ஷர்மா ஆகியோர் வென்றுள்ளனர்.</p><p>இவர்கள் ப்ளூம்பெர்க் பத்திரிகையாளர் நடாலி ஒபிகோ பியர்சன் உடன் இணைந்து வெளியிட்ட “trAPPed” என்ற விசாரணை அறிக்கைக்காக Illustrated Reporting and Commentary பிரிவில் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவில் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் இணையவழி மோசடிகள் எவ்வாறு பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. </p><p>சுபர்ணா ஷர்மா பத்திரிகைத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். ஆனந்த் ஆர்.கே மும்பையைச் சேர்ந்த ஓவியர் மற்றும் கலைஞர். இவர்களின் பணி, இந்திய பத்திரிகைத்துறையின் உலகளாவிய தாக்கத்தையும், டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் வலியுறுத்துகிறது.</p>
