விளையாட்டு
17 Jan 2026, 2:42 pm

இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே பூப்பந்து போட்டி

4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி

திருச்சிராப்பள்ளி, ஜன.17 - திருச்சி ஜமால் முகமது கல்லூரி யின் 75 ஆவது பவள விழா ஆண்டை யொட்டி, இந்திய பல்கலைக் கழகங்க ளின் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களு க்கு இடையே மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஜமால் முகமது கல்லூரி யுடன் இணைந்து நாக் அவுட் மற்றும் லீக் முறையில் ஜமால் முகமது கல்லூ ரியில் கடந்த ஜன.14 அன்று முதல் சனிக்கிழமை (ஜன.17) வரை நடை பெற்றது. இதில் ஆந்திரப் பிரதேசம், அசாம், அருணாசலப் பிரதேசம், பீகார், சண்டி கர், சத்தீஸ்கர், தில்லி, கோவா, குஜ ராத், ஹரியானா, இமாச்சலப் பிரதே சம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்க்க ண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரி புரா, உத்தரப்பிரதேசம், உத்தர கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநி லங்களிலிருந்து 113 பல்கலைக்கழ கங்கள் பங்கேற்றன. திருச்சி பாரதிதாசன், சென்னை அண்ணா, மங்களூர், ஆந்திரா, அனந்தபூர் ஸ்ரீ கிருஷ்ணதேவராய பல்கலைக்கழகம், கோவை பாரதி யார், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 8 பல்கலைக்கழக அணிகள் காலிறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றன. காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனம், அனந்தபூர் ஸ்ரீ கிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தை (35-18 : 35-09) என்ற புள்ளிகள் கணக்கில் வென்றும், கோவை பாரதி யார் பல்கலைக்கழகம், சென்னை பல் கலைக்கழகத்தை (35-32 : 35-32) என்ற புள்ளிகள் கணக்கில் வென்றும், சென்னை அண்ணா பல் கலைக்கழகம், மங்களூர் பல்கலைக் கழகத்தை (35-29 : 35-9) என்ற புள்ளி கள் கணக்கில் வென்றும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆந்திரா பல்கலைக்கழகத்தை (35-19: 34-36: 35-32) என்ற புள்ளிகள் கணக்கில் வென்றும் அரையிறுதி லீக் போட்டி களில் விளையாட தகுதி பெற்றன.

திண்டுக்கல்லில் மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம் கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை

திண்டுக்கல், ஜன.17- திண்டுக்கல்லில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு கள் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி புதூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் வலிப்பு நோய்க்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கோபிநாத் தின் குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுத லின்படி, மருத்துவர் குழுவினரால் கோபிநாத்தின் இரண்டு சிறுநீரகங்கள், கண் மற்றும் தோல் உறுப்புகள் பாது காப்பாக மீட்கப்பட்டன. கோபிநாத்தின் உடல் உறுப்பு தானத்தின் மூலம் ஐந்து மருத்துவ பயனாளிகள் மறுவாழ்வு பெற உள்ளனர். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 3 நபர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மயா னத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது அரசு சார்பில் மரியாதை செலுத் தப்பட்டது. திண்டுக்கல் கோட்டாட்சியர் வி.மூ.திருமலை, கோபிநாத் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் ராஜேந்திரன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.