தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அழிவின் பிடியில் இந்தியப் பொருளாதாரம் - ச.வீரமணி

3 Oct 2026, 9:10 pm
அழிவின் பிடியில்  இந்தியப் பொருளாதாரம் - ச.வீரமணி

அழிவின் பிடியில் இந்தியப் பொருளாதாரம் - ச.வீரமணி

கடந்த காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி முன்வைத்த மிகைப்படுத்தப்பட்ட மற்றும் நம்பமுடியாத கூற்று குறித்த விவாதங்கள் அடங்குவதற்கு முன்பே, மற்றொரு விவகாரம் அரசின் பொருளாதார நிர்வாகிகளின் கோழைத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. யுபிஐ என்னும் ‘ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு’ (UPI - Unified Payments Interface) மூலமான சில வகை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணத்தை விதித்ததன் மூலம், அமெரிக்கா மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் முன் இந்திய அரசு பணிந்துபோய்விட்டது என்பதே அது.

மோடி அரசு மேற்கொண்டிருந்த போலியான பிரச்சாரங்களை பல விவகாரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. புள்ளிவிவரங்களைக் கொண்டு செய்யப்படும் தந்திரமான கணக்கீடுகளை விட, லட்சக்கணக்கான சாமானிய மக்கள் தற்போது எதிர்கொள்ளும் யதார்த்தமான சூழலைப்புரிந்துகொள்வதே தற்போதைய பொருளாதாரப் பாதையை அறிந்துகொள்ள அவசியமாகும். இந்தியப் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தின் அடிப்படைப் போக்கு, நிச்சயமாகத் தற்கொலைக்கு வழிவகுக்கும் ஒரு பாதையாகவே அமைந்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளின் சில வகைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணம் வெறும் 0.4 சதவீதம் மட்டுமே என்று அரசு வாதிடுகிறது.அதுவும் கூட, சாதாரண நுகர்வோர் மீதல்ல; மாறாக, யுபிஐ செயலி மூலம் பணம் பெறும் வணிகர்கள் மீதே இந்தக் கட்டணம்விதிக்கப்படுகிறது என்று அரசு கூறுகிறது.

யுபிஐ கட்டணமும் சிறு வணிகர்களின் பாதிப்பும்

இதற்கு எதிரான வாதம் மிகவும் வலுவானது. வெறும் 4 சதவீதத்தினர் மட்டுமே இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், கட்டணம் விதிக்கப்படக்கூடிய பரிவர்த்தனைகள் 2,000 ரூபாய்க்கு மேல் இருப்பவை மட்டுமேஎன்றும் கூறப்படுவது ஒரு தவறான கண்ணோட்டமாகும். நுகர்வோரிடமிருந்து வணிகர்கள் பெறும் மொத்தத் தொகையில், 66 சதவீதம் இந்தக் கட்டணம்விதிக்கப்படக்கூடிய வகையைச் சேர்ந்ததாகும். எனவே, கட்டணம் விதிக்கப்படக்கூடிய பரிவர்த்தனைகளில் பெரும்பகுதி இந்தப் புதிய முன்மொழிவுகளின் வரம்பிற்குள் வந்துவிடும்.

சிறு வணிகர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று அரசு கூறினாலும், உண்மையில் மாதம் 1லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யும் ஒரு வணிகருக்கு, இந்தக் கட்டணத்தின் தாக்கம் 3,300 ரூபாயாக அமைகிறது. நமக்குஅருகிலுள்ள சிறிய மளிகைக் கடைகள் அல்லது தையல் கடைகளில் கூட நாளொன்றுக்கு 5,000 ரூபாய் முதல் 10,000ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. எனவே, நடைமுறையில் பார்த்தால், ‘மிகக் குறைவானது’ என்று கூறப்படும் இந்தக் கட்டணத்தால் பெரும்பாலான சிறு வணிகங்களும் பாதிக்கப்படும் நிலையே உள்ளது.

யுபிஐ செயலி போன்ற ஒரு சேவை இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, வங்கிச் செலவுகள், சர்வர் பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கான செலவுகள் எனப் பெரும் செலவுகள் ஏற்படுகின்றன என்றும், இச்சேவையைத் தொடர்ந்து செயல்படுத்தவே அரசு இந்தக்குறைந்தபட்சக் கட்டணத்தை வசூலிக்கிறது என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான நிலை

ஆனால், கடந்த ஆண்டில் அனைத்து வங்கிகளின் மொத்த லாபம் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்ததாக அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. யுபிஐ சேவையை நிர்வகிக்கும்பொதுத்துறை நிறுவனமான இந்திய தேசிய செலுத்துதல்கள் கார்ப்பரேஷன் (NPCI) கூட 19,000 கோடி ரூபாய் உபரிவருவாயையும், 7,000 கோடி ரூபாய் கையிருப்புநிதியையும் கொண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது உபரி நிதியிலிருந்து 2.87 லட்சம் கோடி ரூபாயைஅரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி, யுபிஐ-யைத் தவிர்த்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் இரண்டு முக்கிய செயலிகள், அமேசான் மற்றும் கூகுள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்குச்சொந்தமானவை. நுகர்வோரின் வணிக ரீதியான தகவல்களை விற்பனை செய்வதன் மூலம், இந்தப் பரிவர்த்தனைச் செயல்பாடுகளுக்கான தங்கள் செலவில் பெரும் பகுதியை அவை ஈடுசெய்கின்றன. எனவே, யுபிஐ பரிவர்த்தனைகள் மீது முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள், இந்தியாவில் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் சாமானிய நுகர்வோருக்குப்பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், அதே சமயம் அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கான போட்டியைச் சமாளிக்கும் நோக்கிலும்கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

பணமதிப்பு நீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

அரசு யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறது? இந்த முழு விவகாரத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியிலிருந்துபிரித்துப் பார்த்து விவாதிக்க முடியாது. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று நடந்த அந்த முக்கியமானமாலையில், பிரதமர் மோடி தனது பொது உரையின் மூலம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச்செல்லாததாக்கும் அந்தப் பெரும் நடவடிக்கையை ஓர் அதிரடி நடவடிக்கையாக அறிவித்தார். பொருளாதாரத்தில்கறுப்புப் பணம் எவ்வாறு புழங்குகிறது என்பது பற்றிச் சிறிதும் அறிந்திராத ஒருவர், பழைய காலத்து இந்தித்திரைப்படங்களில் காட்டப்படுவது போல, கறுப்புப் பணம் என்பது தலையணை உறைகளிலோ அல்லது படுக்கைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட மண்பானைகளிலோ பதுக்கி வைக்கப்படும் என்று நினைக்கக்கூடும்.

மோடியும் அவரது ஆலோசகர்களும் அப்படித்தான் நினைத்திருந்தனர். ஆனால், 2017-18ஆம் ஆண்டிற்கான இந்தியரிசர்வ் வங்கியின் அறிக்கை, செல்லாததாக்கப்பட்ட 15.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தாள்களில் 15.30 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 99.30 சதவீதம்) வங்கி அமைப்புக்குத் திரும்பிவிட்டதை வெளிப்படுத்தியது. இதுவேஅந்த ஆரம்பக்கட்டக் கணிப்பு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைத் தெளிவுபடுத்தியது.சாமானிய மக்கள் எதிர்கொண்ட பெரும் சிரமங்கள் மற்றும் அதன் விளைவாக எழுந்த பொதுமக்களின் அதிருப்திஆகியவற்றின் காரணமாக, பிரதமர் தாமே தனியார் டிஜிட்டல் வாலட்களை ஊக்குவித்த போதிலும், அரசு யுபிஐசெயலியை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்றாடச் சிறு பணப் பரிவர்த்தனைகளை பெருமளவில் டிஜிட்டல் மயமாக்குவதில் யுபிஐ-யின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டணங்களால், அந்த டிஜிட்டல் வர்த்தகச் சூழலில் மீண்டும்ஒரு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிப் பயணத்திற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே தொடக்கப்புள்ளியாகஅமைந்தது. ரொக்கப் பரிவர்த்தனைகள் மற்றும் சிறு வணிகங்களைச் சார்ந்திருந்த முறைசாரா, ரொக்கத்தைஅடிப்படையாகக் கொண்ட சிறு பொருளாதாரத் துறை கடும் சரிவைச் சந்தித்தது. நுண் மற்றும் சிறு தொழில் துறைமுற்றிலுமாகச் சீர்குலைந்தது. இது வேலைவாய்ப்பின் மீது, குறிப்பாக முறைசாராத் துறையில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட இந்த மோசமான பாதிப்பிற்காக, வாய்ச்சவடால் பேசும் பிரதமரோ அல்லது அவரதுஅடிவருடிகளோ சாமானிய மக்களிடம் மன்னிப்பு கேட்க ஒருபோதும் நேரம் ஒதுக்கவில்லை என்பதுவேறு விஷயம்.

தீவிரமடைந்துவரும் பொருளாதாரச் சமத்துவமின்மை

7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்ளக்கூடியவர்கள் இத்தகைய சிந்தனையற்ற கொள்கை வகுப்பாளர்களாக மட்டுமே இருக்க முடியும்! ஆனால், யதார்த்தம் மிகவும் கசப்பானது. ‘2026 உலகசமத்துவமின்மை அறிக்கை’யின்படி, பொருளாதார ரீதியாக உலகிலேயே அதிக சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 58 சதவீதத்தைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். அதேவேளையில், மக்கள் தொகையில் கடைசி 50 சதவீதத்தினர் வெறும் 15 சதவீத வருமானத்தையே பெறுகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் உலகளாவியவருமானப் பகிர்வில் அந்த கடைசி 50 சதவீதப் பிரிவிலேயே உள்ளனர்.

அதேபோல, செல்வக் குவிப்பைப் பொறுத்தவரை, நாட்டின் மொத்தச் சொத்தில் சுமார் 40சதவீதத்தை முதல் ஒரு சதவீதத்தினர் மட்டுமே வைத்துள்ளனர். முதல் 10 சதவீதத்தினர் நாட்டின் மொத்தச்சொத்தில் ஏறக்குறைய 65 சதவீதத்தைத் தங்கள் வசம் கொண்டுள்ளனர். ஆனால், அடித்தட்டு மக்கள் மொத்தச்சொத்தில் வெறும் 6.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர். பாலினம் மற்றும் தொழிலாளர் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் குறித்த தரவுகள் இந்தச் சமத்துவமின்மைச் சூழலை மேலும் மோசமாக்குகின்றன. பெண் தொழிலாளர்களின் பங்கேற்புவிகிதம் வெறும் 15.7 சதவீதத்திலேயே தேக்கமடைந்துள்ளது.

பாலின ரீதியான ஊதிய இடைவெளி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஊதியம் பெறும் பணிகளில், ஆண்களின் ஊதியத்தில் 61 சதவீதத்தை மட்டுமே பெண்கள் பெறுகின்றனர். மொத்தத் தொழிலாளர் சக்தியில் 94 சதவீதம் பேர் முறைசாராத் துறைகளில் பணிபுரிகின்றனர் என்பது, அத்தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

இருப்பினும், தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், வரிச் சலுகைகள் மற்றும் வங்கிக் கடன் தள்ளுபடிகள் மூலம் அவர்களின் வருமானம் மற்றும்சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் அரசாங்கம் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகிறது. சுகாதாரம் மற்றும் கல்விபோன்ற சமூக நலத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது, தற்போது பரவலானஅதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கார்ப்பரேட்டுகளையும் தங்களுக்கு நெருக்கமானகூட்டுக்களவாணிகளையும் ஊக்குவிக்கும் தனது கொள்கை அணுகுமுறையை அரசாங்கம் மாற்றிக்கொள்ளாத வரை, நாம் நிச்சயமாக ஒரு பெரும் சமூகக் கொந்தளிப்பிற்கு இட்டுச்செல்லப்படுவோம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.