‘போதையில்லா புத்தாண்டு’ கொண்டாட்டம்
1 Jan 2026, 4:14 pm

கோவை, ஜன.1- கோவையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் போதையில்லா புத்தாண்டு கொண் டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்டக்குழு ஏற் பாட்டில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி புதனன்று இரவு நடை பெற்றது. இதில் திரளான இளை ஞர்களும், இளம் பெண்களும் பங் கேற்று மக்கள் ஒற்றுமையை வலியு றுத்தியும், போதைக்கு எதிராகவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டத் தலைவர் என்.ராஜா தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், சங்க மாவட் டச் செயலாளர் தினேஷ் ராஜா, பொருளாளர் அர்ஜூன், கேரளம் மாநிலம், பாலக்காடு மாவட்டத் தலைவர் ஜெயதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

விபத்தில்லா புத்தாண்டு்

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி யது. வழக்கமான பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், பல் வேறு வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள், விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்த கொண் டாட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப் பட்டது. குறிப்பாக கோவையில் உள்ள மேம்பாலங்கள் இரவு 10 மணிக்கு மேல் அடைக்கப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். இதனால் புதனன்று நள்ளி ரவு கோவை மாவட்டத்தில் விபத்து, பிரச்சனைகள் ஏதும் நடைபெறா மல் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று முடிந்ததாக போலீ சார் தெரிவித்துள்ளனர். அதே போல 195 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மது போதையில் வாகனம் ஓட்டி யதாக 29 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் உள்ள விவேகா னந்தா மகளிர் கல்வி நிறுவனங்க ளில் ஆங்கில புத்தாண்டை கொண் டாடும் விதமாக 10 ஆயிரம் மாணவி கள் ஒரே இடத்தில் குவிந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு களை வழங்கி புத்தாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினார் கள். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு நடனமாடினர். பள்ளி பாளையம் நான்கு ரோடு பகுதி யில், பள்ளிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் கௌத மன் தலைமையில் விபத்தில்லா ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலையில், கேக்குகள் வெட் டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங் கப்பட்டது. மேலும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச் சியுடன் தெரிவித்துக் கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாநகரில் 2026 புத் தாண்டை வரவேற்கும் விதமாக பெண்கள், குழந்தைகள் உள்பட இளைஞர்கள் பங்கேற்று ஆடிப் பாடி, ஆரவாரத்துடன் கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உள்ள பல்வேறு ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வழிபாடு நடத்தப்பட்டது. இத்து டன், திருப்பூர் - பல்லடம் சாலை யில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் அமைப்பு சார்பில் இன் னிசை கலை நிகழ்ச்சி கச்சேரி நடை பெற்றது இதில் சின்னத்திரை பிர பலங்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சி களை நடத்தினர். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் களை கட்டிய இந்த கொண்டாட்டத்தில் 2026ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று ஏராளமான பொதுமக்கள் பங் கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நள்ளிரவு ஒரு மணி வரை சிறுவர்கள், பெண்கள், ஆண் கள் என அனைத்து தரப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடு பட்டனர்.