திருப்புவனம்–காளையார் கோவிலில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பேரவை தீர்மானம்
7 Feb 2026, 2:02 pm
<p><strong>திருப்புவனம்–காளையார் கோவிலில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பேரவை தீர்மானம்</strong></p>
<p>சிவகங்கை, பிப்.7- திருப்புவனம்–காளை யார் கோவில் பகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிவ கங்கை மாவட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பி னர் பி.தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத் தில் புதிய மாவட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சத்தி யசீலன், மாவட்ட செயலாள ராக சேவுகப் பெருமாள், மாவட்ட பொருளாளராக நிருபன் பாசு, மாவட்ட துணைத் தலைவராக முத்து ராஜா மற்றும் மாவட்ட துணைச் செயலாளராக வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பேரவையில் பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதில், சிவ கங்கை மாவட்டம் திருப்பு வனம்–காளையார் கோவில் பகுதியில் அரசு கலைக் கல் லூரி தொடங்க வேண்டும் என்றும், மானாமதுரையில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி கட்டிடத்தை துரிதமாக கட்டி முடித்து உட னடியாக திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட் டது. மேலும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானா மதுரை வரை நீட்டிக்க வேண் டும் என்றும், அனைத்து ரயில்களும் சிவகங்கை மற் றும் மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப் பட்டது.</p>
<p> </p>
