தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘இந்திய ஜனநாயகம் மிருதுவானது; ஆனால் எளிதில் உடையக்கூடியது அல்ல’

1 Dec 2025, 3:45 pm
‘இந்திய ஜனநாயகம் மிருதுவானது;  ஆனால் எளிதில் உடையக்கூடியது அல்ல’
<p><strong>&lsquo;இந்திய ஜனநாயகம் மிருதுவானது;&nbsp;ஆனால் எளிதில் உடையக்கூடியது அல்ல&rsquo;</strong></p> <p>புதுதில்லி இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய மான கருத்தாக்கமான அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடு (Basic Structure Doctrine) என்பது, ஒரு பாரம் பரிய இந்திய &lsquo;கட்டில்&rsquo; (Charpai/Khaat) நெய்யப்பட்ட கயிறுக்குச் சமமானது என்று இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்கள் &nbsp;உருவகப்படுத்தினார். இந்தக் கோட் பாடு அரசியலமைப்பை சமநிலையுடனும், நெகிழ்வுடனும், தார்மீக உறுதிப்பாட்டுடனும் நிலைநிறுத்தும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் விவரித்தார். கடினத்தன்மை மற்றும் நெகிழ்வுத் தன்மைக்கு இடையேயான இழுவை கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பின் ஐம்பது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், கடந்த சனிக்கிழமை ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த அமர்வில் தலைமை நீதிபதி உரையாற்றினார். நீதித்துறை சுதந்திரம் என்பது, &ldquo;கடினத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள சரியான இழுவையைப் பேணுவதைச் சார்ந்துள்ளது; ஒரு கட்டிலின் கயிறு நெய்யும் துல்லியம் போலவே&rdquo; என்றார். &ldquo;இந்தச் சமநிலையை, வீட்டிற்கு அருகில் உள்ள ஒன்றின் மூலம் விவரிக்க வேண்டும் என்றால், நான் மிகவும் சாதாரணமான, இந்தியத் தன்மையுடைய &lsquo;கட்டில்லை&rsquo; நோக்கித் திரும்பு வேன். அதன் சட்டகம் (Frame) வலுவானது, அதன் கால்கள் திடமானவை. ஆனால், அதற்கு வடிவத்தையும் செயல்பாட்டையும் வழங்குவது கயிற்றின் கவனமாக நெய் யப்பட்ட பின்னலே. கயிறுகளை மிகவும் இறுக்கமாக இழுத்தால், அது அறுந்துவிடும். மிகவும் தளர்வாக விட்டுவிட்டால், முழு கட்டமைப்பும் தளர்ந்து போகும். அந்தப் பின்ன லின் துல்லியம்தான் &mdash; கடினத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு இடையே உள்ள வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட இழுவை &mdash; அதை நிலைத்தன்மையுடையதாக ஆக்கு கிறது&rdquo; என்றார் அவர். தலைமை நீதிபதியின் கூற்றுப்படி, &ldquo;அடிப் படை அமைப்புக் கோட்பாடு என்பது நமது அரசியலமைப்புக் கட்டிலின் அந்தப் பின்ன லாகும். அரசியலமைப்பு உரை சட்டத்தை வழங்குகிறது, நிறுவனங்கள் கால்களை உருவாக்குகின்றன, ஆனால் கயிறு &mdash; தன்னடக்கத்தின், சமநிலையின் மற்றும் தார்மீக ஒழுக்கத்தின் ஒன்றிணைப்பு &mdash; தான் முழுக் கட்டமைப்பையும் பயனுள்ளதாக, நியாயமான தாக மற்றும் நீடித்ததாக ஆக்குகிறது.&rdquo; முதிர்ச்சியைக் காட்டிய இளம் குடியரசு 13-நீதிபதிகள் அமர்வின் முன்பு நடந்த வரலாற்று விசாரணையை நினைவு கூர்ந்து கேசவானந்த பாரதி வழக்கில், உரையாற்றிய தலைமை நீதிபதி, இந்த வழக்கு நடந்த 1973 ஆம் ஆண்டில் இந்தியா தனது அரசிய லமைப்பு பயணத்தில் வெறும் 23 ஆண்டுக ளையே நிறைவு செய்திருந்தது என்பதை நினைவுகூர்ந்தார். &nbsp;அப்போது உச்சநீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, ஒரு சாதாரண சட்டரீதியான கேள்வி அல்ல, அது ஒரு &lsquo;நாகரிகத்தின் அடிப்படை&rsquo; கேள்வியாக இருந்தது: &ldquo;ஒரு நாடா ளுமன்றப் பெரும்பான்மை கூட அரசிய லமைப்பின் தார்மீக டிஎன்ஏவை - அதாவது அடிப்படைக் கோட்பாட்டை மீண்டும் மாற்றி எழுத அனுமதிக்கப்படுமா?&rdquo; என்பது தான் அந்தக் கேள்வி. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் பல நூற்றாண்டுகளாக அரசியல மைப்பு அனுபவத்தைக் கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவுக்கு அந்த அனுபவம் இல்லாத போதும், &ldquo;இந்த இளம் குடியரசு தைரி யத்துடனும், மனசாட்சியுடனும் அரசியல மைப்பு நெறிமுறையுடனும் பதிலளித்தது&rdquo; என்று அவர் பாராட்டினார். தார்மீக திசைக்காட்டியை விட்டுக்கொடுக்காதது கேசவானந்த பாரதி வழக்கின் உண்மை யான மரபு என்னவென்றால், இந்தியாவின் ஜனநாயக கலாச்சாரம் மிருதுவானது, ஆனால் எளிதில் உடையக்கூடியது அல்ல என்பதை வலியுறுத்தியதாகும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். நாடாளுமன்றம் மாற்ற முடியாது உரையின் போது, கேசவானந்த பாரதி வழக்கில் இடம்பெற்ற இந்தக் கோட்பாட்டைப் பற்றி அவர் மேலும் விவரித்தார். நாடாளுமன்றத்துக்கு அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்துவதற்கு அதிகாரம் உண்டு (சட்டப்பிரிவு 368), ஆனால் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப் பின் ஆன்மாவையோ அல்லது அஸ்திவாரக் கூறுகளையோ அழிக்கவோ, திருத்தவோ முடியாது என்று உச்சநீதிமன்றம் வரையறுத்த எல்லையே இந்தக் கோட்பாடு. ஜனநாயகம், மதச்சார்பின்மை, நீதித்துறை யின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் போன்ற &nbsp;கூறுகளை நாடாளுமன்றம் மாற்ற முடியாது. இதை விளக்கிய தலைமை நீதிபதி, இது நீதித்துறையின் கற்பனையில் உருவானது அல்ல என்றார். மாறாக, இது &ldquo;அரசியல மைப்புச் சட்டத் தொல்பொருள் ஆய்வு (constitutional archaeology)&rdquo; போன்றது என்று விளக்கினார். நீதிபதிகள், அரசியல் சாச னத்தின் இந்தப் புனிதமான அடித்தளக் கோட்பா டுகளைத் தோண்டி எடுத்து, விளக்கவுரை மூலம் வெளிப்படுத்தினர் என்றார். கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு, &ldquo;இந்தியாவின் அரசமைப்பு முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி எனும் குறிக்கோள்களுக்கான உறுதிப்பாட்டின் மிக ஆழமான வெளிப்பாடு களில் ஒன்றாக நிற்கிறது&rdquo; என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரமும் பொறுப்பும் தலைமை நீதிபதி சூர்யகாந்த், அதிகாரம் என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு (Principle) பதிலளிக்க கடமைப்பட்டது என்ற யோசனை அரசமைப்புச் சட்ட வடிவமைப்பில் அமைதியாகப் பதிக் கப்பட்டிருந்தது என்றார். மேலும், எந்த அதிகா ரமும், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீதியின் வாக்குறுதியைத் திருத்தம் செய்து நீக்க முடியாது என்ற அரசியலமைப்பின் மெல்லிய குரலுக்கு இந்தக் கோட்பாடு வடிவம் கொடுத்தது. அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடு என்பது நீதித்துறையின் மேலாதிக்கத்தைக் கோரு வது இல்லை என்றும், அது அரசியலமைப்புக் கே மேலாதிக்கம் உண்டு என்பதை உறுதிப் படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். &nbsp;எதிர்காலத்திற்கான வழிகாட்டி &ldquo;கேசவானந்த பாரதி வழக்கை ஒவ்வொரு தலைமுறையும் மீண்டும் பார்க்கும்போது, அரசமைப்புச் சட்டத்தின் வலிமை வெறும் தாளில் இல்லை, மாறாக அதைப் பாது காக்கும் நபர்களின் நேர்மையில் தான் உள்ளது &nbsp;என்பதை உணர்கிறது&rdquo; என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். அவர் முடிவில், அடிப்படை கட்டமைப்புக் கோட்பாடு என்பது கடந்த காலத்தின் எச்சமாக இல்லாமல், நமது எதிர்காலத்தை வரைபட மாக்குவதற்கான வழிகாட்டி ஆகும் என்றும், இது நம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் காக்க உறுதி பூண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.