தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பலி பீடத்தில் இந்திய ஜனநாயகம் : உண்மையில் செய்ய வேண்டியது என்ன? - வைஷ்ணா ராய்

8 Oct 2026, 10:01 pm
பலி பீடத்தில் இந்திய ஜனநாயகம் : உண்மையில் செய்ய வேண்டியது என்ன? - வைஷ்ணா ராய்

பலி பீடத்தில் இந்திய ஜனநாயகம் : உண்மையில் செய்ய வேண்டியது என்ன? - வைஷ்ணா ராய்

ஆகச்சிறந்த நேரங்களிலும்கூட, தேர்தல்கள் என்பவை ஜனநாயகத்தின் உண்மையான ஆழம் குறித்த மிகத் தோராயமான அளவுகோலாக மட்டுமே இருக்க முடியும். அன்றாடநிர்வாகத்தில் குடிமக்களின் உண்மையான பங்கேற்புதான் வலுவான ஜனநாயகத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கும். கீழ்மட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளையும், மேல்மட்டத்தில்தன்னாட்சி உரிமை பெற்ற நிறுவனங்களையும் கொண்ட வலுவானதொரு கட்டமைப்பினைஉருவாக்கும்போதுதான் உங்களால் அதை அடைய முடியும். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள அனைத்து நகராட்சி அமைப்புகளில்முக்கால்வாசிக்கும் மேற்பட்டவை கட்சி சார்பற்ற தேர்தல்களையே நடத்துகின்றன. சாலைகளைச் சீரமைப்பது அல்லதுகழிவுப்பொருட்களின் மேலாண்மை போன்ற பணிகளுக்குத் தேச அளவிலான அரசியல் கட்சிகளும், அவற்றின் அரசியல் தத்துவங்களும் பொருத்தமற்றவை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அதற்குப் பதிலாக, குடிமக்கள் மன்றக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றுநிதி ஒதுக்கீடுகளைத் தீர்மானிக்கின்றனர்; நடைபெறும் பணிகளைக் கண்காணிக்கின்ற னர்; மன்றஉறுப்பினர்களின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துகின்றனர்.

ஆனால், இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்தே இந்திய அறிவுஜீவிகள் தேர்தல்களை ஜனநாயகத்தின் திருவுருவமாக மிகுந்த பக்தியுடன் வழிபட்டு வந்துள்ளனர். இதன் விளைவாக, உண்மையில் எந்தெந்த முக்கியமான விஷயங்கள் அதற்காகப் பணயம் வைக்கப்பட்டுள்ளன என்பதையே குடிமக்களும் மறந்துவிட்டனர். (தேர்தல்) பிரச்சாரங்கள், கருத்துக்கணிப்புகள், ஆய்வுகள்,புள்ளி விவரங்கள் ஆகியவை மீது – கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்தவொரு விஷயத்திற்கும் கிடைக்காதஅளவிற்கு – வெறித்தனமான கவனம் செலுத்தப்படுகிறது. எனவே, தேர்தல் நடைமுறையையே சீர்குலைத்து, தங்களின் அதிகாரத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்திகொள்வது என்பது சில நேர்மையற்ற நோக்கமுடையோருக்கு மிகவும் எளிதாகிவிட்டது. ஏனெனில், ‘பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள்’ என்ற பெயர் இருக்கும்வரை, ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க, தாங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை என்பதையும் அவர்கள்நன்கு அறிந்துள்ளனர்.

நிறுவனங்களின் சிதைவும் தேர்தல்களும்

நமது இன்றைய நிலை என்னவெனில், ஊடகங்கள், நாடாளுமன்றம், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகள், உச்ச நீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள்கூட உள்ளுக்குள்ளாகவே குடைந்தெடுக்கப்பட்டு, அவற்றின் முதுகெலும்புகளும் முறிக்கப்பட்டுவிட்டன. குடிமக்கள் இதைப் பற்றிஆழமாகச் சிந்திக்க ஊக்குவிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, தேர்தல்கள் என்ற மாபெரும் திருவிழாமீண்டும்மீண்டும் காட்சி தந்து, தாங்கள் ஒரு ஜனநாயக அமைப்பில்தான் வாழ்கிறோம் என்ற எண்ணத்தை மேற்கொள்ளும்விதத்தில் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது.விரைவில் தேர்தலை எதிர்நோக்கவுள்ள உத்தரப்பிரதேசம் குறித்து விவாதிக்கும் 2026 அக்டோபர் 15 தேதியிட்டபிரண்ட்லைன் இதழில் நான் ஏன் இதைப் பற்றிப் பேசுகிறேன்? ஏனெனில், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் பத்திரிகையாளர் ரித்திகா சோப்ரா சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளமுறைகேடுகளின் தீவிரத்திலிருந்து முற்றிலும் விலகிய நிலையிலும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும், அங்கே தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

செயல்படும் ஒரு ஜனநாயக நாட்டில், தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார் என்பதும், தேர்தல் ஆணையத்தின் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான முடிவுகளில் அவர்களைப் பங்கேற்க விடாமல் செய்துள்ளார் என்பதும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் நீக்குவது தொடர்பான செயல்முறையை மத்திய அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அவர் கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்பதும் இந்த முறைகேடு எவ்வளவு மிகப்பெரியது என்பதை நிறுவுகின்றன. உச்சநீதிமன்றம், தானாகவே முன்வந்து விசாரணை நடத்துவதற்கும், இந்தப் பிரச்சனையில் ஒரு தீர்வு எட்டப்படும்வரை சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் கள் அனைத்தையும் நிறுத்திவைப்பதற்கும் வழிவகுத்திருக்கவேண்டும். ஆனால், அதுபோன்ற எதுவும் நடைபெறுவதாகத் தோன்ற வில்லை.

இதுகுறித்து நாம் வியப்படையத் தேவை யில்லை. அரசு நிர்வாகத்தின் முன் தனது சரணாகதியை வெளிப்படுத்தியதன் மூலம் தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்ட பல நிறுவனங்களில் நீதித்துறையும் ஒன்றாக மாறிவிட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் ‘ஆணையத்தின் முடிவெடுக்கும்

செயல்முறையில் தேர்தல் ஆணையர்கள் அனைவருக்கும் சமமான கருத்துரிமை உண்டு’ என்று அறிவித்துள்ள போதிலும், அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானநடவடிக்கைகளைத் தனித்துச் செயல்படுத்து வதற்காக, தனது சக ஆணையர்களின் எதிர்ப்பைப்பொருட்படுத்தாமல், ஞானேஷ் குமார் தனியொருவராக அனைத்தையும் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார் என்றநிலைக்கு நாம் வந்துவிட்டோம்.

தேர்தல் ஆணையக் கட்டமைப்பின் மறுசீரமைப்பு அவசியம்

எனினும், கடந்த பல மாதங்களாக ஒன்றன்பின் ஒன்றாகக் குவிந்துவந்துள்ள கண்டுபிடிப்பு களின் உச்சகட்டமே இது. ராகுல் காந்தி மீண்டும் மீண்டும்‘வாக்குத் திருட்டு’ தொடர்பான ஆதாரங்களைப் பகிர்ந்துகொண்டு வருவது; இதுவரை கிட்டத்தட்ட 13 கோடி பேர்வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது; இது தொடர்பான படிவங்கள் 6 மற்றும் 7 ஆகியவைபரவலான அளவில் தவறாகப் பயன்படுத்தப் பட்டது; (ஆணையத்தின்) மென்பொருள் உருவாக்கியிருந்த ‘தர்க்கரீதியிலான முரண்பாடு’ என்ற குற்றச்சாட்டுகள் ஆகிய இவையனை த்துமே தேர்தல் நடைமுறையின் சட்டபூர்வத் தன்மை குறித்தும்,தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் மிகத் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.

‘இந்தியா’ கூட்டணியும் முக்கிய எதிர்க்கட்சி களும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரிவருகின்றன. இதற்கென நாட்டின்நகரங்களெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாகவும் அவை அறிவித்துள் ளன. ஞானேஷ் குமார்பதவி விலகுவது என்பது – அதுவும் அரசு அவரை ‘இரை’யாகக் கொடுக்க முன்வந்தாலும்கூட – வெற்றிக் களிப்பின்ஓர் ஆனந்த நடனமாக மட்டுமே இருக்கும்.அவரை மட்டுமே பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோருவது இந்தப் பிரச்சனையை ஒரு தனிநபரின் ஒழுக்கக்கேட்டுப் பிரச்சனையாகச் சுருக்கிவிடும். அவ்வாறு செய்வது, தங்களை மிக உயர்ந்தஒழுக்க சீலர்களாகக் காட்டிக்கொண்டு, ஞானேஷ் குமார் தரங்கெட்ட ஒருவர் என்று கண்டனம் தெரிவிக்கவே அரசிற்கும் அதன் ஆதரவாளர் களுக்கும் வாய்ப்பளிக்கும்.

இந்த அரசியல் அமைப்புச் சட்ட நெருக்கடிக்கு மிகவும் விரிவானதொரு நடவடிக்கை தேவைப்படுகிறது. இப்போது செயல்பட்டு வரும் தேர்தல்ஆணையத்தின் கட்டமைப்பையே முற்றிலுமாகக் கலைத்துவிட்டு, அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னைத் முற்றிலுமாக விடுவித்துக் கொண்ட புதியதொரு கட்டமைப்பை அதனிடத்தில் மீண்டும் உருவாக்க வேண்டும். மிகக் கொடூரமான சிறப்புத் தீவிர திருத்த (SIR)நடவடிக்கைகளால் குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவுக்குக் குறைந்தபட்ச அளவிற்காவது இழப்பீடு வழங்கும்வகையில், திருத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்கு வாக்காளர் பட்டியல் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும்.இந்தச் செயல்முறையானது புதிய தேர்தல் ஆணையத்தின் மூலம் புதிதாகத் தொடங்கப்பட வேண்டும்.இன்றைய நிலையில், தேர்தல்கள் என்பவை எந்த அளவிற்கு ஒரு கேலிக்கூத்தாக மாறி யுள்ளதோ, அதே அளவிற்குத் தீவிரத்துடன் விரிவான மறுசீரமைப்பைமேற்கொள்ளாமல் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அதேபோன்ற ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.