சொந்த நாட்டிலேயே முதலீடு செய்ய தயங்கும் இந்திய நிறுவனங்கள் பதற்றத்தில் மோடி அரசு ; அவசர சட்டத்தை கொண்டு வர திட்டமா?
5 Jun 2026, 12:49 am

சொந்த நாட்டிலேயே முதலீடு செய்ய தயங்கும் இந்திய நிறுவனங்கள் பதற்றத்தில் மோடி அரசு ; அவசர சட்டத்தை கொண்டு வர திட்டமா?

புதுதில்லி ஈரான் - அமெரிக்கா போர், ஹோர்முஸ், உலகளாவிய பொருளாதார நெருக்க டியால் இந்திய தனியார் நிறுவனங்கள் சொந்த நாட்டிலேயே முதலீடு செய்யத் தயங்கி வருகின்றன.

மேலும் சில முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

இதனால் பதற்றத்தில் உள்ள ஒன்றிய மோடி அரசு தனியார் நிறுவனங்க ளுக்காக அவசரச் சட்டத்தை கொண்டு வர திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஒன்றிய அரசு தற்போது தன் சொந்த அரசு அமைப்புகளுக்கு உள்ளிருந்தே கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

காரணம் இந்தியாவிற்குள் இருக்கும் பெரிய தனியார் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்ய முன்வராமல் தயங்குவதுதான் நாட்டின் தற்போதைய மிக முக்கியமான, உண்மையான பொருளாதாரப் பிரச்சனையாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஒன்றிய அரசு ஒரு குறுக்கு வழியைத் தேடி வருகிறது.

அதில் மிக முக்கியமானது ஒன்றிய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் ஈட்டும் லாபத்தில் விதிக்கப்படும் 12.5% நீண்டகால மூலதன ஆதாய வரியை (Long-term Capital Gains Tax) முற்றிலுமாக நீக்குவதுதான். இதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒரு ‘அவசரச் சட்டத்தை’ பிறப் பிக்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் சொந்த நிறுவனங்கள் முதலீடு செய்யாததால், வெளிநாட்டுப் பணத்தை எப்படியாவது ஈர்ப்பதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த அவசர முடிவை எடுத்துள்ளது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.