ஏவிசி கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு
13 Dec 2025, 5:13 pm
<p><strong>ஏவிசி கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி புதிய கிளை திறப்பு</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.13- மயிலாடுதுறை அருகிலுள்ள ஏவிசி கல்லூரி வளாகத்தில், இந்தியன் வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டது. ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கட்ராமன் ரிப்பன் வெட்டி கிளையை துவக்கி வைத்தார். மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வளாகத்தில் கடந்த 51 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கிளை, மாணவர்கள் பயன்பெறும் வகையில் இயங்கிய நிலையில், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி வாயில் அருகிலுள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய கிளையின் முதல் பரிவர்த்தனையாக ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையை செலுத்தி அதற்கான ரசீதை நீதிபதி வெங்கடராமன் பெற்றுக் கொண்டு பேசினார். முதல்வர் ஆர். நாகராஜன், பொறியியல் கல்லூரி இயக்குநர் எம். செந்தில் முருகன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். மேலும், முன்னாள் தேர்வு நெறியாளர் மேஜர் ஜி. ரவிசெல்வம், துணை முதல்வர் எம். மதிவாணன், டீன் எஸ். மயில்வாகனன், தேர்வு நெறியாளர் ஜி. கார்த்திகேயன், பொறியியல் கல்லூரி முதல்வர் பி. பாலசுப்ரமணியன், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் ஏ.வளவன், முதல்வர் என். தனசேகரன், கல்லூரி நிர்வாகிகள், வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மன்னம்பந்தல் இந்தியன் வங்கி கிளை மேலாளர் எம். மகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.</p>
