இந்திய விவசாயத் தொழிலாளர்கள் மோடி அரசை மண்டியிட வைப்பார்கள்! பெ. சண்முகம் எச்சரிக்கை
24 Dec 2025, 3:39 pm
<p><strong>இந்திய விவசாயத் தொழிலாளர்கள் மோடி அரசை மண்டியிட வைப்பார்கள்! பெ. சண்முகம் எச்சரிக்கை</strong></p>
<p>நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்ட முயலும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது: வேலைவாய்ப்பின்றி புலம்பெய ரும் தொழிலாளர்களின் துயரத்தைப் போக்குவதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற தொழிலாளர்கள் புலம்பெயர்வது குறைந்தது. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் அதிகம் பயனடையக் கூடிய திட்டமாக இது இருந்தது. ஆனால், இந்த திட்டத்தை எந்தளவிற்கு சிதைத்து சீரழிக்க முடியுமோ, அதனை கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு செய்து வந்தது. இன்றைக்கு ஒரேடியாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக் கட்டக்கூடிய வேலையாகத்தான் கடந்த டிசம்பர் 18 அன்று ‘விபி ஜி ராம் ஜி’ என்ற புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறது. 1948 ஜனவரி 30 அன்று ஆர்எஸ்எஸ் கூட்டத்தை கோட்சே என்ற கொடியவன் அநியா யமான முறையில் காந்தியடிகளை சுட்டுக் கொன்றான். 78 ஆண்டுகள் ஆகியும், காந்தியின் மீதான வன்மமும் வெறுப்பும் அந்த மதவாதக் கும்பலுக்கு இன்னும் குறைய வில்லை. அதன் வெளிப்பாடு தான் மகாத்மா காந்தி என்ற பெயர் கூட திட்டங்களுக்கு இருக்கக் கூடாது என்று மாற்றியுள்ளனர். குடியரசுத் தலைவரும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். கேட்டால், 100 நாள் வேலையை 125 நாளாக உயர்த்தியிருக்கிறோம் என்று அவர்களாகவே அவர்களை பாராட்டிக் கொள்கின்றனர். ஆனால், 100 நாட்களாக இருந்தபோதே, போதிய நிதியை மோடி அரசு ஒதுக்காததன் காரணமாக, 15 நாள் அல்லது 20 நாள் அல்லது அதிகபட்ச மாக 40 நாட்கள் தான் வேலை தரப்பட்டது. 100 நாள் இருந்தபோதே வேலை கொடுக்க வக்கில்லாத வர்கள், தற்போது 125 நாளுக்கு எப்படி கொடுப்பார்கள்? அதுமட்டுமல்ல, இப்போது 60 சதவிகிதம் தான் ஒன்றிய அர சாங்கம் நிதி வழங்கும்; மீதம் 40 சதவிகித நிதியை மாநில அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ள னர். ஏற்கெனவே தமிழ்நாடு, கேரளம் போன்ற பாஜக ஆளாத மாநி லங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதியையே மோடி அரசு வழங்காமல், இந்த மாநிலங்களை நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது. தற்போது ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் 40 சதவிகித நிதியையும் நீங்களே தர வேண்டும் என்றால், மாநிலங்கள் எங்கே போகும்? உண்மையில் இவர்களின் நோக்கம் திட்டத்தையே ஒழித்துக் கட்டு வதுதான். இதனைக் கண்டித்துத் தான், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமையில் பல லட்சக்கணக்கானோர் இன்று போராட்டக்களத்திற்கு வந்திருக் கிறோம். நிச்சயமாக மோடி அரசை பின்வாங்க வைப்போம். இது நடக்காத காரியமல்ல. ஏற்கெனவே 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள விவ சாயிகளை பாதிக்கக்கூடிய மூன்று வேளாண் விரோத சட்டங்களை விவாதமே இல்லாமல் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றினார்கள். இதற்கு எதிராக, லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியை 381 நாட்கள் முற்றுகையிட்டு, மோடி அரசை மண்டியிட வைத்தார்கள். எந்த சட்டத்தில் கமா, புள்ளியை கூட மாற்ற மாட்டோம் என்று சொன்னா ர்களோ அந்தச் சட்டத்தையே விவ சாயிகள் திரும்பப் பெற வைத்தா ர்கள். அந்தப் பெருமை இந்திய விவ சாயிகளுக்கு உண்டு. எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது, ஜனாதிபதியும் கையெழுத்திட்டு விட்டார் என்று நினைக்க வேண்டாம். ‘விபி ஜி ராம் ஜி’ என்ற சட்டத்தையும் திரும்பப் பெற வைப்போம். இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டார்.</p>
<p> </p>
