விளையாட்டு
10 May 2026, 10:09 pm

வில்வித்தை உலகக்கோப்பை இந்திய மகளிர் அணி தங்கம் வென்று கலக்கல்

சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் மகளிர் ரீகர்வ் அணி பிரிவில் அசத்த லான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான பலம் வாய்ந்த தென் கொரியாவை 5-1 என்ற வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து, ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனால் வெற்றியைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘ஷூட்-ஆப்’ சுற்றில் 28-26 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்தியா 2 பதக்கங்களுடன் (ஒரு தங்கம், ஒரு வெண்கலம்) நிறைவு செய்தது. முன்னதாக, ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் சனியன்று இந்தியாவின் சாஹில் ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களை அணுகி பேசுதல், உடல்ரீதியாக தொடர்பு கொள்ள கூடாது ஐபிஎல் தொடரில் புதிய கட்டுப்பாடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐபிஎல் ஆட்சிக்குழு அணிகளின் ஒழுக்கம், பாதுகாப்பு நடைமுறைகள், அணிக் கட்டுப்பாடுகள் தொடர்பாக கடுமையான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலா ளர் தேவஜித் சைக்கியா வெளியிட்ட அறிவிப்பில், “ஐபிஎல் போட்டிகளின் போது சில அணிகள், அணியுடன் தொடர்புடையவர்கள் பல்வேறு விதி முறைகளை மீறியுள்ளனர். இவ்வா றான செயல்கள் தொடர்ந்தால், அது ஐபிஎல் தொடருக்கும், சம்பந்தப்பட்ட அணிகளுக்கும், பிசிசிஐக்கும் பெரிய அளவில் கண்ணிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். சில வீரர்கள், உதவிப் பணி யாளர்கள், அணி மேலாளரின் அனுமதி இல்லாமல் வெளிநபர்களை தங்களது ஹோட்டல் அறைகளுக்கு அழைத்த தாக கூறப்பட்டுள்ளது. விதிமுறை களின்படி, யாரேனும் வீரர்களை அல்லது அணியினரை சந்திக்க வேண்டுமெனில், அது அணி மேலாளர் மூலம் அனுமதி பெற்று, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரி விக்கப்பட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அணி மேலாளருக்கே இதுகுறித்து தெரியாமல் உள்ளது. இனிமேல் குடும்பத்தினர், நண் பர்கள் உள்ளிட்ட யாரேனும் வீரர்கள் அல்லது அணியினரை அறையில் சந்திக்க வேண்டுமெனில், எழுத்துப் பூர்வமான அனுமதி அவசியம். சந்திப்பு கள் பெரும்பாலும் ஹோட்டல் லாபி பகுதியில் மட்டுமே நடைபெற வேண்டும். கடந்த காலங்களில் விளை யாட்டு உலகில் ஊழல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, அணிகளின் தனிப்பட்ட இடங்களில் அனுமதி இல்லாத நபர்கள் நுழைவதை கட்டுப்படுத்துவது அவ சியம் ஆகும். மிக முக்கியமாக சில அணிகளின் உரிமையாளர்கள் போட்டி நடை பெற்று கொண்டிருக்கும் போதே வீரர்களை அணுகி பேசுதல், கட்டிப் பிடித்தல் அல்லது உடல்ரீதியாக தொடர்பு கொள்ள முயன்ற சம்பவங் களையும் இனி ஏற்க மாட்டோம். போட்டி முடியும் வரை அணி உரிமையாளர்கள் டக் அவுட், உடை மாற்றும் அறை மற்றும் மைதானப் பகுதிகளுக்குள் சென்று வீரர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவது மிகவும் கடுமையான ஒழுங்கு மீறலாக கருதப்படும். அதே போல மைதானம், உடை மாற்றும் அறை, டக்- அவுட், அணி ஹோட்டல் மற்றும் பயிற்சி பகுதிகளில் வேப், இ- சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - தில்லி இடம் : தர்மசாலா, இமாச்சல் / நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)