தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமங்கள் வளர்ந்தால் தான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்! விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேச்சு

11 Feb 2026, 6:11 pm
கிராமங்கள் வளர்ந்தால் தான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்! விஐடி  வேந்தர் கோ.விசுவநாதன் பேச்சு
<p><strong>கிராமங்கள் வளர்ந்தால் தான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்! விஐடி &nbsp;வேந்தர் கோ.விசுவநாதன் பேச்சு</strong></p> <p>வேலூர், பிப்.11 - விஐடி பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் கணியம்பாடி ஒன்றியம் சலமநத்தம் ஊராட்சியில் தொடக்க விழா புதனன்று &nbsp;நடைபெற்றது. பிப்.17 வரை நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 14 மாநிலங்களை சேர்ந்த 418 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 13 கிராமங்களில் நடை பெறும் இச்சிறப்பு முகாமில் மருத்துவ முகாம், பள்ளி, ஏரி ஆகிய பொது இடங் களை சுத்தம் செய்தல், வாக்கு அளிப்பதன் முக்கி யத்துவம் குறித்து விழிப்பு ணர்வு பேரணி, கால்நடை மருத்துவ முகாம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ &nbsp;மற்றும் காளான் வளர்ப்பு, துரித உணவு பயிற்சி, &nbsp;விவசாயிகளுக்கு சைபர் கிரைம் மோசடி விழிப்புணர்வு &nbsp;நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. &nbsp;சிறப்பு முகாமை தொடங்கிவைத்து விஐடி வேந்தர் முனைவர் கோ.விசு வநாதன் பேசியதாவது, இந்தியாவில் 6.50 லட்சம் கிராமங்கள் உள்ளன. தமிழகத்தில் 12,600 ஊராட் சிகள் உள்ளன. ஊராட்சி கள் வளர்ந்தால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இந்தியாவில் உள்ள கிராமங்கள் வாழ்ந்தால் தான் பொருளாதார பலம் மிக்க நாடாக நாம் மாற முடியும். &nbsp;விவசாய நாடான இந்தி யாவில் விவசாயப் பொரு ளுக்கு உரிய விலை கிடைப்ப தில்லை. அவர்கள் விளை விக்கும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் கிடைக்க வேண்டும். &nbsp;நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் பங்கேற்க வந்துள்ள மாணவர்கள் கிராமங்களில் உள்ள கல்வி மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை கண்ட றிந்து தீர்வுகளை காண உதவ வேண்டும். &nbsp; இந்தியாவில் விவசாயி களுக்கு விளையும் உணவுப் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் கிடைப் பதில்லை. இந்தியாவில் சுமார் 25 சதவீத தொகை தான் கிடைக்கிறது ஆனால் வளர்ந்த நாடுகளில் விவ சாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 75 சதவீத தொகை கிடைக்கிறது. &nbsp;கல்லூரி படிக்கும் மாண வர்கள் விவசாயத் தொழி லுக்கு வருவதில்லை. மாறாக உயர்கல்வி படிக் கும் மாணவர்கள் அனை வரும் விவசாய தொழிலுக்கு வர வேண்டும். &nbsp;கிராமத்தில் உள்ள வர்கள் ஒற்றுமையாக இருந்து தங்களுக்கு தேவை யானவைகளை அரசிடம் இருந்து பெற்று கொள்ள வேண்டும். &nbsp; அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார் பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெற கல்வி உதவி த்தொகை வழங்கப்பட்டு வருகிறது. &nbsp;உயர்கல்வியில் மாண வர் சேர்க்கை விகிதம் இந்தி யாவில் 28 சதவீதமாக உள்ளது. தமிழகம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை &nbsp;விகிதத்தில் 50 சதவீதத்து டன் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை யில் உயர் கல்வியில் மாண வர் சேர்க்கை விகிதத்தை 50 விழுக்காடாக &nbsp;உயர்த்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளுடன் போட்டி போடும் வகையில் உயர் கல்வியின் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 லிருந்து 75 விழுக்காடாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் தமிழகமும் வளர்ந்த மாநிலமாக மாறும். இந்தியாவும் வளர்ச்சி பெறும்,அழியாத செல்வ மான &nbsp;கல்வியை ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று பேசினார். &nbsp;சிறப்பு விருந்தினராக ஆற்காடு தொகுதி எம்எல்ஏ &nbsp;ஜே.எல். ஈஸ்வரப்பன் பங்கேற்று கருத்துரை யாற்றினார். &nbsp;ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா கமல் பிரசாத், துணை தலை வர் கஜேந்திரன் மற்றும் விஐடி பல்கலைக்கழக பதி வாளர் ஜெயபாரதி, மாணவர் &nbsp;நல இயக்குநர் நைஜூ, நாட்டு &nbsp;நலப்பணித் திட்ட ஒருங்கி ணைப்பாளர் பூபாலன், விபிஎஸ்.கலைச்சந்தர், சாமி நாதன் ஆகியோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.